For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

IND vs ENG: நான் கஷ்டப்பட்டு பந்துவீசி சம்பாதிக்கும் பணத்தை இழக்க விரும்பல.. ICCக்கு பும்ரா குட்டு

லண்டன்: இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பயன்படுத்தி வந்த பந்து அடிக்கடி மாற்றப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. பந்தின் வடிவம் மாறி இருப்பதாக கூறி இந்திய வீரர்கள் நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இந்த சூழலில் சிராஜ் மற்றும் கில் ஆகியோர் தன்னிச்சையாக பந்தை மாற்ற முயற்சி செய்ததாகவும் பும்ராவிடம் ஒரு வார்த்தை கூட கேட்கப்படவில்லை என்று பல விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் இந்த விவகாரத்தில் பும்ரா என் தலையிடவில்லை என்று அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி கேட்டனர்.

Jasprit Bumrah on Ball controversy

அதற்கு பதில் அளித்த பும்ரா பந்து எவ்வாறு இருக்கிறது என்பதை என்னால் கட்டுப்படுத்த முடியாது. அதே சமயம் அது குறித்து கேள்வி கேட்டு என்னுடைய பணத்தை நான் இழக்க விரும்பவில்லை. இதுபோன்று (பேட்டிங்கிற்கு சாதகமான)ஆடுகளத்தில் கடுமையாக உழைத்து அதிக ஓவர்களில் வீசி வருகின்றேன்.

இந்த சமயத்தில் நான் ஏதேனும் சர்ச்சையான கருத்தை கூறி என்னுடைய போட்டிக்கான ஊதியத்தை அபாராதமாக செலுத்த நான் விரும்பவில்லை. எங்களுக்கு எந்த பந்து கொடுக்கப்படுகிறதோ அதை வைத்து நாங்கள் பந்து வீசி விக்கெட் எடுக்க முயற்சி செய்கின்றோம். அதுதான் என்னுடைய கருத்து.

பந்தை மாற்றுங்கள் என்று சொல்லவும் முடியாது, அதற்காக போராடுவோம் முடியாது. சில சமயம் பந்து நமக்கு சாதகமாக இருக்கும். சில சமயம் எங்களுக்கு மோசமான பந்து கிடைக்கும். அதை நாம் ஒன்றும் செய்ய முடியாது என்று பும்ரா கூறினார். இந்திய வீரர்களுக்கு மட்டும் ஐசிசி அபராதம் விதிக்கும் மற்றும் ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கிறது என்ற இரண்டு கருத்தை மறைமுகமாக செய்தியாளர் சந்திப்பில் கூறி இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுபோன்று பந்தை மாற்ற முயற்சி செய்த இந்திய அணியின் கேப்டன் கில் மற்றும் சிராஜுக்கு இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஜோ ரூட் கண்டனம் தெரிவித்திருக்கின்றார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள சுனில் கவாஸ்கர் இதேபோல் ஒரு சர்ச்சை இந்தியாவில் நடைபெற்றால் இங்கிலாந்து ஊடகங்கள் சும்மா இருக்குமா என்றும், பந்து 10 ஓவர்கள் வீசி இருந்தால் அது 20 ஓவர் பழைய பந்து போல் மாறி இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.

Story first published: Saturday, July 12, 2025, 13:07 [IST]
Other articles published on Jul 12, 2025
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+