Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs ENG: 9 நாள் இடைவேளை இருக்கு.. எதுக்கு பும்ராவுக்கு ஓய்வு தரனும்? முன்னாள் கேப்டன் கேள்வி

லண்டன்: இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவி இருக்கிறது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இங்கிலாந்து அணி இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

இந்த சூழலில் அடுத்த டெஸ்ட் போட்டி வரும் புதன்கிழமை நடைபெற உள்ளது. இந்த போட்டியில் பும்ரா விளையாடுவாரா இல்லை அவருக்கு ஓய்வு வழங்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால் இந்த தொடர் தொடங்குவதற்கு முன்பே பும்ரா வெறும் மூன்று போட்டிகளில் தான் விளையாடுவார் என கம்பீர் தெரிவித்திருந்தார்.

Jasprit bumrah

இந்த நிலையில் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள முன்னாள் இந்திய அணி கேப்டன் அணில் கும்ப்ளே கடைசியாக நடைபெறும் இரண்டு டெஸ்ட் போட்டிக்கும் பும்ரா தேர்வு செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இது குறித்து பேசிய அவர், நான் மட்டும் இந்திய அணி நிர்வாகக் குழுவில் இடம் பெற்றிருந்தால் நிச்சயமாக பும்ராவை அடுத்த போட்டியில் விளையாட வைக்க எனது குரலை கொடுப்பேன்.

ஏன் என்றால் அடுத்த டெஸ்ட் மிகவும் முக்கியமானதாக மாறிவிட்டது. பும்ரா நான்காவது டெஸ்ட் போட்டியில் விளையாடாமல் ஓய்வில் இருந்து ஒருவேளை இந்தியா அந்த போட்டியில் தோற்று விட்டால், அவ்வளவுதான். தொடர் முடிந்து விட்டது. இங்கிலாந்து தொடரை கைப்பற்றி விடும். அதன் பிறகு பும்ரா கடைசி டெஸ்டில் விளையாடினால் என்ன விளையாடவில்லை என்றால் என்ன? எனவே பும்ராவை கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் நீங்கள் விளையாட வைக்க வேண்டும்.

ஆனால் அவர் மூன்று டெஸ்ட் போட்டிகள் தான் விளையாடுவார் என கம்பீர் அறிவித்திருந்தார். மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கும் நான்காவது டெஸ்ட் போட்டிக்கும் பெரிய இடைவேளை இருக்கின்றது. நீங்கள் இந்தியாவில் நடைபெறும் எந்த தொடரும் விளையாட வேண்டாம். எவ்வளவு ஓய்வு வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள். ஆனால் நான்காவது டெஸ்ட் போட்டியில் பும்ரா கண்டிப்பாக இடம் பெற வேண்டும் என்று அணில் கும்ப்ளே கூறியுள்ளார்.

Story first published: Tuesday, July 15, 2025, 22:57 [IST]
Other articles published on Jul 15, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+