Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs ENG: ஆடுகளத்திற்குள் பும்ராவை அனுமதிக்காத பராமரிப்பாளர்.. பதிலடி தந்த யாக்கர் கிங்

லண்டன்: இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளும் ரன் குவிப்புக்கு சாதகமாக இருந்ததால் மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான ஆடுகளம் எவ்வாறு அமைக்கப்பட போகிறது என்பது தான் பலரின் கேள்வியாக இருந்தது.

இந்த சூழலில் ஒவ்வொரு போட்டிக்கு முன்பும் இரு அணி நிர்வாகிகளும் முக்கிய பவுலர்களும் ஆடுகளும் எவ்வாறு இருக்கிறது என்பதை பார்த்து ஆய்வு செய்வார்கள். அப்போது ஆடுகளத்தை யாரும் மிதிக்க கூடாது என்பது ஒரு விதி. ஏனென்றால் அது ஆடுகளத்தை சேதமாக்கிவிடும் என்பதற்காக இவ்வாறு செய்வார்கள்.

Jasprit bumrah

ஆனால் ஆடுகளத்தை தொடுவதற்கு எந்த ஒரு தடையும் கிடையாது. இந்த சூழலில் வழக்கம் போல் மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு ஆடுகளம் எவ்வாறு இருக்கிறது என்பதை பார்ப்பதற்காக பும்ரா வந்தார். அப்போது ஆடுகளத்தை கையால் தொடுவதற்கு பும்ரா வந்தபோது அங்கு நின்று கொண்டிருந்த ஆடுகளப் பராமரிப்பாளர் பும்ராவை தடுத்து நிறுத்தி இங்கே நிற்காதீர்கள் செல்லுங்கள் என்று கூறினார்.

இதனால் கடுப்பான பும்ரா மைதானத்தில் காலை வைப்பது போல் பாவ்லா செய்தார்.அப்போது மீண்டும் களப்பரமாரிப்பாளர், ஆடுகளத்தை மிதிக்காதீர் தயவு செய்து செல்லுங்கள் என்று கூறினார். இதனை அடுத்து பும்ரா அங்கிருந்து நகர்ந்து சென்றார். பும்ராவின் இந்த லொள்ளு ரசிகர்கள் கவனத்தை ஈர்த்திருக்கிறது. அதே சமயம் இந்திய அணியின் முக்கியமான பவுலரான பும்ரா ஆடுகளத்தை போய் சோதனை செய்ய பராமரிப்பாளர் தடுப்பது ஏன்?

கையை கூட வைக்க கூடாது என்று பலரும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். இது இந்திய ஆடுகளத்தில் இங்கிலாந்து வீரர்களுக்கு இவ்வாறு செய்யப்பட்டால், அந்நாட்டு கிரிக்கெட் ரசிகர்கள் சும்மா விடுவார்களா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த நிலையில் டாஸ் வென்று இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. 39 ஓவர் முடிவில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு இங்கிலாந்து அணி 112 ரன்கள் எடுத்திருக்கிறது

Story first published: Thursday, July 10, 2025, 19:35 [IST]
Other articles published on Jul 10, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+