Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs ENG: நிச்சயம் டிரா கிடையாது.. ஏதேனும் ஒரு அணி வெல்லும்.. சம்பவம் காத்திருக்கு- கேஎல் ராகுல்

லீட்ஸ்: இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி தற்போது கிளைமாக்ஸ் காட்சி நோக்கி சென்று கொண்டிருக்கிறது. கடைசி நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற மேலும் 350 ரன்கள் தேவைப்படுகின்றது. இந்திய அணி வெற்றி பெற 10 விக்கெட் எடுக்க வேண்டியது உள்ளது.

இதனால் போட்டி சமனை நோக்கி செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இங்கிலாந்து வீரர்கள் அதிரடியாக ஆடுவார்கள் என்பதால் எது வேண்டுமானாலும் நடக்கலாம். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய அணியின் நட்சத்திர வீரர் ராகுல், "நாளை ஒரு சிறந்த் சம்பவம் கிரிக்கெட் ரசிகர்களுக்கு காத்துக் கொண்டிருக்கின்றது."

KL Rahul

"இந்த டெஸ்ட் ஆரம்பிக்கும் போது ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கின்றது. இதனால் டிராவை நோக்கி செல்லும் என எதிர்பார்த்தேன்.ஆனால் ஆடுகளம் பல ஆச்சரியத்தை அளித்தது. ஆடுகளம் சில சமயம் சிதலமடைந்தது. ஆடுகளத்தில் நாளை விரிசல் அதிகரிக்கலாம். இதனை ஜடேஜா சிறப்பாக பயன்படுத்துவார் என்று நம்புகிறேன்."

"ஆடுகளத்தில் பந்தில் பவுன்சும் ஒரே மாதிரி இல்லை. சில பந்துகள் நன்றாக எகிறியது. நானும் பண்டும் விளையாடிக் கொண்டிருந்தபோது பெரிதாக பேசிக்கொள்ளவில்லை. நாங்கள் அமைதியாக தான் இருந்தோம். நாங்கள் ஏற்கனவே பலமுறை பார்ட்னர்ஷிப் அமைத்து இருக்கின்றோம். அவர் எந்த மனநிலையில் பேட்டிங்கில் இருக்கின்றார் என்று நம்மால் கணிக்கவே முடியாது."

"எனவே அவரை அவராக விட்டு விட வேண்டும்,அதுவே நல்லது. சில சமயம் அவரிடம் பேசி அவரை நிதானப்படுத்த வேண்டும். என்னுடைய பேட்டிங்கை பொருத்தவரை நான் பெரிதாக எதையும் மாற்றவில்லை. சமீப காலமாக ரன்கள் வருகின்றது. கடந்த காலங்களில் நான் பெறும் தொடக்கத்தை பெரிய ஸ்கோர்களாக மாற்ற தவறி விட்டேன். ஆனால் தற்போது என்னுடைய வாழ்க்கையில் பல விஷயங்கள் மாறி வருகின்றது."

"நான் முன்பு போல் இல்லாமல் தற்போது மிகவும் சாந்தமாக மாறிவிட்டேன். எந்த நம்பர்கள் பின்னாடியும் நான் ஓடுவதில்லை. இதற்கு பின்னால் பல உழைப்புகள் இருந்திருக்கின்றது. இதைப் போன்று அபிஷேக் நாயருடன் நான் பல மணி நேரம் உழைத்திருக்கின்றேன். முன்பெல்லாம் அதிகம் ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நினைப்பில் இருந்தேன்."

"ஆனால் தற்போது நான் எண்ணிக்கைகளை பார்ப்பது கிடையாது. நாட்டுக்காக விளையாட போகின்றோம். நாட்டுக்காக சிறப்பாக செயல்பட வேண்டும் என்பது மட்டும்தான் மனதில் இருக்கின்றது. இது எனக்கு வழங்கப்பட்டுள்ள வாய்ப்பாக கருதுகின்றேன். நாளைய போட்டி நிச்சயமாக டிராவாக இருக்காது. ஏதேனும் ஒரு அணி வெற்றி பெறும். நிச்சயமாக விறுவிறுப்பான நாளாக தான் இருக்கும். முதல் இன்னிங்ஸ் இருப்பது போல் ஆடுகளம் பேட்டிங்கிற்கு எளிதாக இருக்காது. எனவே வாய்ப்பை பயன்படுத்துவது எங்களை போட்டிக்குள் வைத்திருக்கும். இங்கிலாந்து அணிக்கு எங்களால் முடிந்த அளவுக்கு நெருக்கடியை நாங்கள் ஏற்படுத்துவோம் என்று ராகுல் தெரிவித்துள்ளார்.

Story first published: Monday, June 23, 2025, 23:35 [IST]
Other articles published on Jun 23, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+