Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

'தல போல வருமா' தோனியை மிஸ் செய்யும் இந்திய அணி.. டிஆர்எஸ்-ல் சொதப்பிய ராகுல்.. கடுப்பான ரோகித்

கட்டாக்: இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பராக தற்போது கே எல் ராகுலுக்கு தான் முன்னுரிமை வழங்கப்படுகிறது. ரிஷப் பண்ட்க்கு விபத்து ஏற்பட்டதை அடுத்து கேஎல் ராகுல் தான் அந்த பணியை செய்தார். 50 ஓவர் உலகக் கோப்பையிலும் கேஎல் ராகுல் தான் விக்கெட் கீப்பிங் பணியை செய்தார்.

ஒரு காலத்தில் விக்கெட் கீப்பர் என்பவர் ஒரு பவுலர் போல தான். அதாவது அவருடைய பணி விக்கெட் கீப்பிங் செய்வது மட்டும்தான். அவரிடம் இருந்து பேட்டிங்கில் பெரிதாக எதுவும் எதிர்பார்க்க முடியாது.

ind vs eng kl rahul rohit sharma

ஆனால் காலம் மாற மாற விக்கெட் கீப்பருக்கும் பேட்டிங் தெரிய வேண்டும் என்ற ஒரு நிலை வந்தது. அதன் பிறகு பல விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன்கள் உலக அளவில் சிறந்த வீரராக திகழ்ந்தார்கள். கில்கிறிஸ்ட், மார்க் பவுச்சர், தோனி, சங்ககாரா என அந்த பட்டியல் நீண்டு கொண்டு சென்றது. இந்த நிலையில் தற்போது கிரிக்கெட் மேலும் மாறி வருவதால் இப்போது இருக்கும் விக்கெட் கீப்பர் வெறும் விக்கெட் கீப்பிங் செய்தால் மட்டும் போதாது. அவர் ஒரு நிழல் கேப்டனாக செயல்பட வேண்டும்.

ஆம், களத்தில் கேப்டனாக யார் இருந்தாலும் விக்கெட் கீப்பர் தான் பீல்டர்களை சரியாக நிறுத்துவது, டிஆர்எஸ் எடுக்க வேண்டுமா? வேண்டாமா? என்பதை சரியாக கணித்து சொல்ல வேண்டும். இந்தப் பணியை கேப்டனாக இருக்கும் போதும் சரி, அணியில் சாதாரண வீரராக இருக்கும் போதும் சரி, தோனி சிறப்பாக செய்தார்.

இதனால் டிஆர்எஸ் என்பதை தோனி ரிவ்யூ சிஸ்டம் என்று ரசிகர்களை மாற்றி விட்டார்கள். ஆனால் அதன் பிறகு வந்த விக்கெட் கீப்பர்களால் தோனியின் இடத்தை நிரப்பவே முடியவில்லை. இந்த நிலையில் கே எல் ராகுலும் இன்று டிஆர்எஸ் விஷயத்தில் கடுமையாக சொதப்பினார். தற்போது அக்சர் பட்டேல், பந்தை ஸ்வீப் செய்ய முயற்சி செய்தார்.

அப்போது பந்து அவரது காலில் பட்டது. இதற்கு வீரர்கள் அவுட்டு கேட்க கள நடுவர் அவுட் இல்லை என மறுத்துவிட்டார். இதனை அடுத்து கேப்டன் ரோகித் சர்மா டி ஆர் எஸ் முடிவை எடுக்கலாமா என கே எல் ராகுலிடம் கேட்டார். ஆனால் கே எல் ராகுல் பந்து வெளியே செல்கிறது என்பது போல் சொல்லி விட்டார். இதனால் ரோஹித் சர்மாவும் டிஆர்எஸ்ஐ எடுக்கவில்லை. ஆனால் அதன் பிறகு ரீப்ளேவில் பார்த்த போது பந்து ஸ்டெம்பில் பட்டிருக்கும் என கணிக்கப்பட்டது. ஒருவேளை ரோகித் சர்மா டி ஆர் எஸ் எடுத்திருந்தால் அது அவுட் ஆகி இருந்திருக்கும். இதனை அடுத்து கேப்டன் ரோகித் சர்மா கே எல் ராகுலை கடிந்து கொண்டார்.

Story first published: Sunday, February 9, 2025, 18:38 [IST]
Other articles published on Feb 9, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+