100 ஓவருக்கு மேல் கடைசி இன்னிங்சில் பேட்டிங் செய்து, இந்திய அணி டிரா செய்த டெஸ்ட் போட்டிகள் லிஸ்ட்
மான்செஸ்டர்: இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் தோல்வியை அடையும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய வீரர்கள் அபாரமாக விளையாடி போட்டியை சமன் செய்திருக்கிறார்கள்.
முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 358 ரன்கள் எடுக்க இங்கிலாந்து அணி 69 ரன்கள் குவித்தது. இதனை அடுத்து 311 ரன்கள் பின்தங்கிய நிலையில் இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்கும் விதமாக இந்திய அணி பேட்டிங் செய்தது. முதல் ஓவரிலேயே ஜெய்ஸ்வால், சாய் சுதர்சன் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டம் இழக்க, 0 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இந்தியா இழந்தது.

இதனால் இன்னிங்ஸ் வித்தியாசத்தில் தோல்வி அடையும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் ராகுல் மற்றும் கில் ஆகியோர் அபாரமாக விளையாடி ரசிகர்களுக்கு நம்பிக்கை அளிக்க இறுதியில் வாஷிங்டன் சுந்தர், ஜடேஜா ஆகியோர் அடுத்தடுத்து சதம் விளாசி இந்திய அணியை தோல்வியிலிருந்து காப்பாற்றினர்.
இந்த இன்னிங்ஸில் மொத்தமாக இந்திய வீரர்கள் மூன்று சதம் அடித்திருக்கின்றார்கள். அதுமட்டுமல்லாமல் 143 ஓவர்கள் பேட்டிங் செய்து இங்கிலாந்தின் வெற்றியை தடுத்திருக்கிறார்கள். இந்த நிலையில் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் நூறு ஓவருக்கு மேல் பேட்டிங் செய்து டிரா செய்த போட்டிகளை தற்போது பார்க்கலாம். 2009 ஆம் ஆண்டு நேப்பியரில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 314 ரன்கள் பின்தங்கி இருந்தது.
அப்போது இரண்டு நாட்கள் எஞ்சி இருந்தது. இந்த தருணத்தில் தற்போதைய பயிற்சியாளரான கௌதம் கம்பீர் 643 நிமிடம் பேட்டிங் செய்து 137 ரன்கள் அடித்தார். இதேபோன்று டிராவிட்,டெண்டுல்கர், லக்ஷ்மன்,யுவராஜ் ஆகியோரும் அபாரமாக பேட்டிங் செய்ய இந்திய அணி 180 ஓவர்கள் வரை பேட்டிங் செய்து போட்டியை சமன் செய்தது.
இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் 2002 வெஸ்ட் இண்டீஸ் எதிரான கொல்கத்தா டெஸ்ட் போட்டி இருக்கிறது. இதில் கொல்கத்தா அணி 139 ரன்கள் முன்னிலை பெற்றிருந்த நிலையில், இந்திய அணி கடைசி இன்னிங்ஸில் 87 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகள் இழந்து தடுமாறியது. அப்போது சச்சின் டெண்டுல்கர் 176 ரன்களும், லக்ஷ்மன் 154 ரன்கள் எடுத்து இந்திய அணி 159 ஓவர்கள் பேட்டிங் செய்து போட்டியை டிரா செய்தது.
இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்திருப்பது 2021 சிட்னி டெஸ்ட் போட்டி. இதில் இந்திய அணி 131 ஓவர்கள் பேட்டிங் செய்து போட்டியை டிரா செய்தது. இதில் தமிழக வீரர் அஸ்வின், ஹனுமா விகாரி ஆகியோர் அபாரமாக பேட்டிங் செய்து போட்டியை டிரா செய்தனர். அதேபோன்று 2002 ஆம் ஆண்டு நாட்டிங்காம் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இதேபோல் 357 ரன்கள் முதல் இன்னிங்சில் எடுக்க இங்கிலாந்து அணி 617 ரன்கள் குவித்தது.
இதை அடுத்து களம் இறங்கிய இந்திய அணி 11 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்த போது டிராவிட், கங்குலி, சச்சின் ஆகியோர் சதம் அடித்து 115 ஓவர்கள் வரை பேட்டிங் செய்து அணியை காப்பாற்றினர். இதேபோன்று 2010 ஆம் ஆண்டு அகமதாபாத் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக இந்திய அணி 28 ரன்கள் முன்னிலை பெற்று இருந்தது.அப்போது இரண்டாவது இன்னிங்ஸில் 15 ரன்கள் 5 விக்கெட் இழந்து தடுமாறியது. இந்த நெருக்கடியான சமயத்தில் லக்ஷ்மணன், ஹர்பஜன்சிங்கும் பேட்டிங் செய்தனர். இதில் ஹரபஜன்சிங் தன்னுடைய முதல் சதத்தை அடித்து போட்டியை டிரா செய்தார்.


Click it and Unblock the Notifications