Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs ENG: நான் உனக்கு என்ன பாவம் பண்னேன் சிராஜ்.. பும்ராவுக்கு கைக்கொடுக்காத DSP Siraj

பிர்மிங்காம்: இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதலில் 587 ரன்கள் குவித்தது. இதனால் ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்ததால், இந்திய அணியே இவ்வளவு அடித்திருக்கிறது இங்கிலாந்து அணி என்ன செய்யப் போகிறது என்று ரசிகர்கள் பயத்தில் இருந்தனர்.

மேலும் பும்ரா கூட இந்த டெஸ்ட் போட்டியில் இல்லையே என்ற குழப்பத்தில் ரசிகர்கள் இருந்தனர். ஆனால் யாருமே எதிர்பாராத வகையில் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் சிராஜ் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

Mohammed siraj

இதேபோன்று ஆகாஷ் தீப் நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றி இங்கிலாந்து அணி 407 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் 180 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி மூன்றாவது நாள் முடிவில் 64 ரன்களுக்கு ஒரு விக்கெட் என்ற ஸ்கோருடன் இருந்தது. இந்த நிலையில் சிராஜ் தொடர்பான ஒரு புள்ளி விவரம் வெளியாகி இருக்கின்றது.

அதாவது பும்ரா இருந்தால் சிராஜ் டெஸ்ட் போட்டிகளில் விக்கெட்டுகள் எடுக்க தடுமாறுகிறார் என்ற புள்ளிவிவரம் தெரிய வந்திருக்கின்றது. பும்ராவுடன் இணைந்து சிராஜ் பந்து வீசும் போது 44 இன்னிங்ஸில் அவருடைய பந்துவீச்சு சராசரி 33.8 என்ற அளவில் இருந்திருக்கிறது.ஆனால் பும்ரா இல்லாமல் களமிறங்கும் சிராஜ் 26 இன்னிங்சில் அவருடைய பந்துவீச்சு சராசரி 25.21 என்று அளவில் குறைந்து சிறப்பாக இருக்கின்றது.

இதன் மூலம் பும்ரா இல்லாமல் சிராஜ் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார் என தெரியவந்துள்ளது. இதேபோன்று பும்ராவுடன் இணைந்து பந்து வீசும் போது ஒரு முறை மட்டுமே ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கும் முகமது சிராஜ், பும்ரா இல்லாமல் இதுவரை மூன்று முறை ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார் என்ற புள்ளி விவரமும் தெரிய வந்துள்ளது.

இதேபோன்று சொந்த மண்ணில் விளையாடும் போது மட்டும் ஒரே ஒருமுறை மட்டும் தான் சிராஜ் ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். ஆனால் இந்தியாவுக்கு வெளியே இதுவரை 9 முறை 5 விக்கெட்டுகளை அவர் வீழ்த்தியுள்ளார். இந்த போன்று SENA நாடுகளில் கடைசியாக 8 முறை இந்திய பவுலர்கள் ஐந்து விக்கெட் எடுத்தவர்கள் பட்டியலில் சிராஜ் இரண்டு முறையும் பும்ரா ஆறுமுறையும் இருக்கின்றனர்.

இதை சுட்டிக்காட்டி பலரும் சிராஜை கிண்டல் அடித்து வருகின்றனர். பும்ரா,அப்படி உங்களுக்கு என்ன தான் பாவம் செய்தார். அவருடன் பந்து வீசும் போது மட்டும் ஏன் தடுமாறுகிறீர்கள் என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதுபோன்று பிரமிங்காம் மைதானத்தில் இந்தியாவுக்காக ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய நான்காவது வேகப்பந்துவீச்சாளர் என்று பெருமையை சிராஜ் பெற்றிருக்கின்றார்.

Story first published: Saturday, July 5, 2025, 14:40 [IST]
Other articles published on Jul 5, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+