Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்திய டெஸ்ட் வரலாற்றில் புதிய சாதனை.. அஸ்வின், ஜடேஜா கூட்டணி வெறித்தன ரெக்கார்ட்.. கும்ப்ளே காலி

ஐதராபாத் : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின், ஜடேஜா கூட்டணி பந்துவீச்சில் மிகப் பெரிய சாதனை ஒன்றை படைத்திருக்கிறது. இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி ஐதராபாத்தில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.

இங்கிலாந்து வீரர்கள் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்த நிலையில், அஸ்வின் ஜடேஜா கூட்டணியை பந்துவீச ரோகித் சர்மா அழைத்தார். இந்த வீரர்கள் இரு முனையில் இருந்தும் பந்துவீச தொடங்கிய உடன் விக்கெட்டுகள் சரிய தொடங்கின.

IND vs ENG - R Ashwin and Jadeja surpasses Kumble-Harbhajan pair by picking most wickets in test

இருவரும் விக்கெட் வேட்டையில் ஈடுபட்ட உடன், இங்கிலாந்து அணி சரிவை நோக்கி சென்றது. இதன் மூலம், அஸ்வின் ஜடேஜா கூட்டணி மிகப் பெரிய சாதனை ஒன்றை படைத்துள்ளது. அதன் மூலம், சர்வதேச டெஸ்ட் வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை கூட்டாக வீழ்த்திய வீரர்கள் பட்டியலில், கும்ப்ளே, ஹர்பஜன் சிங் சாதனையை இந்த கூட்டணி முறியடித்துள்ளது.

கும்ப்ளே ஹர்பஜன்சிங் கூட்டணி ஒட்டுமொத்தமாக 501 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறது. இந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருந்த அஸ்வின்- ஜடேஜா கூட்டணி முதலிடத்திற்கு சென்று இருக்கிறது. இந்த கூட்டணி தற்போது 506 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்கள். 474 விக்கெட்டுகளுடன் ஜாகீர் கான் ஹர்பஜன் சிங் கூட்டணியும், 431 விக்கெட்டுகளுடன், அஸ்வின் உமேஷ் யாதவ் கூட்டணியும், 412 விக்கெட்டுகளுடன் கும்ப்ளே, ஸ்ரீநாத் கூட்டணியும் உள்ளது.

Story first published: Thursday, January 25, 2024, 14:52 [IST]
Other articles published on Jan 25, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+