Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs ENG : 13வது முறை.. எனக்குனே வருவீங்களா.. ஒரே பந்தில் வீழ்த்திய அஸ்வின்.. புலம்பிய ஸ்டோக்ஸ்!

தரம்சாலா : இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸை 13வது முறையாக இந்திய அணியின் சீனியர் ஸ்பின்னரான ரவிச்சந்திரன் அஸ்வின் வீழ்த்தி அசத்தியுள்ளார்.

இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 218 ரன்களுக்கு ஆல் அவுட்டான நிலையில், இந்திய அணி 477 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது. அதிகபட்சமாக இந்திய அணியின் சுப்மன் கில் 110 ரன்களும், கேப்டன் ரோகித் சர்மா 103 ரன்களும் விளாசினர்.

IND vs ENG Ravichandran Ashwin gets England Captain Ben Stokes for the 13th Time in Test Cricket


3வது நாளில் முதல் 30 நிமிடங்களுக்குள்ளாகவே இந்திய அணி ஆல் அவுட்டான நிலையில், 259 ரன்கள் முன்னிலை பெற்றது. இதையடுத்து இங்கிலாந்து அணியின் டக்கெட் - கிராலி கூட்டணி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கினர். 2வது ஓவரிலேயே டக்கெட்டை 2 ரன்களில் அஸ்வின் வீழ்த்திய நிலையில், கிராலியும் அஸ்வின் வியூகத்தில் சிக்கி டக் அவுட்டாகி வெளியேறினார்.


பின்னர் வந்த போப் ஸ்வீப் ஷாட் அடிக்கிறேன் என்ற பெயரில் டாப் எட்ஜாகி 19 ரன்களில் அஸ்வின் பந்திலேயே ஆட்டமிழந்தார். ஆனால் பேர்ஸ்டோவ் அஸ்வின் பந்தில் அடுத்தடுத்து அதிரடியாக சில சிக்சர்களை விளாசினார். இதனால் பொறுப்பு கேப்டனான பும்ரா, உடனடியாக ஜடேஜா மற்றும் குல்தீப் யாதவை அட்டாக்கில் கொண்டு வந்தார். அப்போது குல்தீப் யாதவ் சுழலில் பேர்ஸ்டோவ் 39 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன்பின் இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் களம் புகுந்தார்.


கிட்டத்தட்ட உணவு இடைவேளைக்கு ஒரு ஓவர் மட்டுமே வீச வேண்டிய தேவை இருந்த நிலையில், திடீரென அஸ்வினை அட்டாக்கில் கொண்டு வந்தார் பும்ரா. ஏற்கனவே பென் ஸ்டோக்ஸை 12 முறை அஸ்வின் வீழ்த்தியதால், ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும் அந்த ஓவரின் முதல் 4 பந்தை ஜோ ரூட் எதிர்கொண்டு பரபரப்பை குறைத்தார். இந்த நிலையில் அஸ்வின் வீசிய முதல் பந்திலேயே பென் ஸ்டோக்ஸ் போல்டாகி பரிதாபமாக வெளியேறினார்.


இதனால் இங்கிலாந்து அணி 103 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் பவுலிங்கில் பென் ஸ்டோக்ஸ் 13வது முறையாக ஆட்டமிழந்து வெளியேறியுள்ளார். இதுவரை அஸ்வினுக்கு எதிராக 648 பந்துகளை எதிர்கொண்டுள்ள பென் ஸ்டோக்ஸ் 19.5 பேட்டிங் சராசரியுடன் 253 ரன்கள் மட்டுமே சேர்த்து 13 முறை விக்கெட்டை கொடுத்துள்ளார். ஜாம்பவான் வீரரான பென் ஸ்டோக்ஸ், அஸ்வின் பந்தில் தொடர்ந்து சொதப்புவது இந்திய ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்று வருகிறது.

Story first published: Saturday, March 9, 2024, 12:22 [IST]
Other articles published on Mar 9, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+