Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இது என்ன டி20 போட்டியா? பவுண்டரி லைனில் ஜடேஜா, சாய் சுதர்சன் இணைந்து அபார கேட்ச்.. வேற லெவல்

லீட்ஸ்: இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர்கள் ஜடேஜா சாய் சுதர்சன் இணைந்து பவுண்டரி லைனில் பிடித்த கேட்ச் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி இருக்கிறது. பொதுவாக டி20 கிரிக்கெட் போட்டிகளில் தான் சிக்ஸர் அடிக்க வீரர்கள் முயற்சி செய்யும்போது அதை தடுப்பதற்காக வீரர்கள் பவுண்டரி லைனில் கேட்ச் பிடித்து பவுண்டரி லைனில் மிதித்து விடுவோம் என நினைத்து பந்தை தூக்கி வீசுவார்கள்.

அப்போது வேறு ஒரு வீரர் அந்த பந்தை பிடித்து கேட்சை நிறைவு செய்வார். ஆனால் இப்படி டெஸ்ட் கிரிக்கெட்டில் பெரும்பாலும் நடந்தது கிடையாது. இந்த தருணத்தில் இங்கிலாந்து அணி அதிரடியாக இன்று விளையாடி வந்தது.

Ravindra Jadeja Sai Sudharsan

இந்திய அணி முதல் இன்னிங்சில் 471 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தனர். இதனை அடுத்து இங்கிலாந்து அணி அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தது. இங்கிலாந்து அணி ரன் குவிப்பில் ஈடுபட்டது. ஹாரி புரூக் குறிப்பாக அதிரடியாக விளையாடி இரண்டு சிக்ஸர், 11 பவுண்டர்கள் எடுத்து 99 ரன்கள் எடுத்த நிலையில் ஒரு ரன்னில் சதத்தை மிஸ் செய்தார்.

இந்த சூழலில் இங்கிலாந்து அணியின் ஜேமி ஸ்மித் மட்டும் அதிரடியாக விளையாடினார். ஐந்து பவுண்டரி, ஒரு சிக்சர் என 52 பந்துகளில் 40 ரன்கள் எடுத்திருந்தார். அப்போது பிரசித் கிருஷ்ணா வீசிய பந்தை தூக்கி அடித்தார். அப்போது பவுண்டரி லைனில் இருந்து கொண்டு இருந்த ஜடேஜா கேட்ச் பிடித்தார். ஆனால் பவுண்டரி லைனை மிதித்து விடுவோம் என நினைத்து ஜடேஜா பந்தை தூக்கி எறிந்தார்.

அப்போது சாய் சுதர்சன் அங்கு இருந்து கேட்சை பிடித்தார். எனினும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு என உரிய ஸ்லீப் கேட்சில் இந்தியா தொடர்ந்து கோட்டை விட்டு வருகிறது. ஜெய்ஸ்வால் மட்டும் இன்றைய ஆட்டத்தில் மூன்று கேட்ச் வாய்ப்பை தவறவிட்டது. இது ஆட்டத்தில் மிகப்பெரிய பின்னடைவை இந்திய அணிக்கு ஏற்பட்டிருக்கின்றது.இதனால் டெஸ்ட் போட்டிகளுக்கு அடிப்படையான ஸ்லீப்பிங் கேட்சை இந்தியா சரியாக மேற்கொள்ள வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றன.

Story first published: Sunday, June 22, 2025, 20:08 [IST]
Other articles published on Jun 22, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+