Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs ENG: ஹாரி புரூக் பிடித்தது கேட்சே கிடையாது.. ஜடேஜாவை ஏமாற்றிய இங்கிலாந்து.. என்ன நடந்தது?

மான்செஸ்டர்: இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் ஜடேஜா ஆட்டம் இழந்த முறையில் தற்போது சர்ச்சை ஏற்பட்டு இருக்கின்றது. 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்திய அணி ஒன்றுக்கு இரண்டு என்ற கணக்கில் பின்தங்கி உள்ள நிலையில், நான்காவது டெஸ்ட் போட்டி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இந்த தொடரில் இந்திய அணியின் பேட்டிங்கில் ஜடேஜா ஒரு பாறை போல் இருந்து வருகிறார். தற்போது இந்த தொடரில் ஜடேஜா தொடர்ந்து நான்கு அரை சதம் அடித்து இந்த நிலையில் ரிஷப் பண்ட் காயம் அடைந்த சூழலில் ஜடேஜாவின் இன்னிங்ஸ் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது.

Jadeja Harry brook catch

அதேபோல் ஜடேஜாவும் நல்ல முறையில் ஆட்டத்தை தொடங்கினார். 40 பந்துகளை எதிர்கொண்டு 20 ரன்கள் சேர்த்தார். அப்போது ஜோப்ரா ஆர்ச்சர் வீசிய பந்து ஒன்று ஜடேஜாவின் பேட்டில் எட்ஜ் ஆகி ஸ்லீப்பில் நின்று கொண்டிருந்த ஹாரி புரூக்கிடம் சென்றது. இந்த கேட்சை ஹாரி புரூக் டைவ் அடித்து பிடித்த போது பந்து லேசாக தரையில் பட்டது போல் தெரிந்தது.

ஆனால் இதற்கு கள நடுவர் அவுட் வழங்கினார். எனினும் இதை பார்த்த ஜடேஜா ரிவ்யூ கேட்காமல் களத்தை விட்டு வெளியேறினார். பொதுவாக இது போல் டைவ் அடித்து வீரர்கள் கேட்ச் பிடிக்கும் போது நடுவர்கள் மூன்றாம் நடுவரின் உதவியை நாடி இது அவுட்டா இல்லையா என்று பார்ப்பார்கள். ஆனால் இது எந்த ஒரு நடைமுறையும் கடைபிடிக்காமல் நடுவர் அவுட் வழங்கி விட்டார்.

இந்த வீடியோ காட்சிகளை பார்த்த ரசிகர்கள் ஹாரி புரூக் பிடித்த கேட்ச் நியாயமாக இருப்பது போல் தெரியவில்லை. பந்து தரையில் பட்டது தெளிவாக இருப்பதாக குற்றச்சாட்டி உள்ளனர். இங்கிலாந்து வீரர்கள் ஏமாற்றி ஜடேஜாவின் விக்கெட்டை வீழ்த்தி விட்டதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கையில் ரிவியூ இருக்கும்போது ஜடேஜா ஏன் ரிவ்யூவும் கேட்கவில்லை என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஜடேஜாவின் ஆட்டம் இழந்த முறை தற்போது சர்ச்சையை ஏற்படுத்திருக்கின்றது.

Story first published: Thursday, July 24, 2025, 19:37 [IST]
Other articles published on Jul 24, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+