Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2024 : இதுதான் சிஎஸ்கே பாசம்.. தோனி வரலைனா என்ன.. நம்ம நேரில் போவோம்.. தல வீட்டிற்கு சென்ற தளபதி

ராஞ்சி : சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனியின் வீட்டின் கதவுகளுக்கு முன் நின்று சிஎஸ்கே நட்சத்திர வீரர் ஜடேஜா பதிவிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. இந்த வெற்றியின் மூலமாக இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கில் வென்று சாதனை படைத்துள்ளது. ராஞ்சி மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டி என்பதால், ஆட்டத்தின் ஏதேனும் ஒரு தருணத்தில் தோனி மைதானத்திற்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

IND vs ENG : Ravindra Jadeja posted a photo infront of MS Dhoni house after the Ranchi Test win against England

ஆனால் டெஸ்ட் போட்டி முடிவடைந்த போதும் கூட தோனி மைதானத்திற்கு நேரில் வரவில்லை. ஐபிஎல் தொடருக்கு தயாராகும் வகையில் ஜார்க்கண்ட் வீரர்களுடன் தான் தோனி பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். இருப்பினும் இந்திய அணி வீரர்களை தோனி சந்திக்காதது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தோனியை காண இந்திய அணியின் ரவீந்திர ஜடேஜா நேரில் சென்றுள்ளார்.

தோனி வீட்டின் கதவுகளுக்கு முன்பாக நின்று ரவீந்திரா ஜடேஜா புகைப்படம் எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஜடேஜாவின் பதிவில், ஜாம்பவானான தோனியின் வீட்டிற்கு முன் ரசிகனாக நின்று புகைப்படம் எடுப்பது ஜாலியாக உள்ளது என்று தெரிவித்துள்ளார். ஜடேஜா பதிவிட்டுள்ள இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகின்றன.

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தொடங்குவதற்கு இன்னும் 3 வாரங்களே உள்ள நிலையில், சிஎஸ்கே அணியின் ஜாம்பவானை ஜடேஜா சந்தித்துள்ளார். கடந்த ஆண்டு குஜராத் அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் கடைசி 2 பந்துகளில் சிஎஸ்கே அணிக்கு வெற்றியை தேடி கொடுத்தார் ஜடேஜா. அந்த வெற்றியால் உற்சாகமான தோனி, ஜடேஜாவை தூக்கி வைத்து கொண்டாடினார்.

இதனால் தோனியின் ரியல் தளபதியாக ஜடேஜா ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார். இந்த நிலையில் கடைசி முறையாக தல - தளபதி இணைந்து சிஎஸ்கே அணிக்காக களமிறங்கவுள்ளதாக, இப்போதே ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். மேலும் இந்திய வீரர்களை பார்க்க தோனி வரவில்லை என்றாலும், ஜடேஜா சென்று பார்த்திருப்பது சிஎஸ்கே ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Story first published: Wednesday, February 28, 2024, 10:51 [IST]
Other articles published on Feb 28, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+