Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மாமனார் உடன் சண்டை.. மனைவியை கூல் செய்த ஜடேஜா.. எல்லா கணவர்களுக்கும் இதே நிலை தானா

Ravindra Jadeja : சர்வதேச கிரிக்கெட்டில் தற்போது ஜடேஜா கெத்து காட்டி வருகிறார். பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலுமே கலக்கி வருகிறார். ஆல்ரவுண்டர்களில் ஜடேஜா தான் உலகத்திலே டாப் என்று பெயரும் பெற்றிருக்கிறார். சமீபத்தில் நடந்து முடிந்த ராஜ்கோட் டெஸ்ட் போட்டியில் கூட சொந்த மண்ணில் ஜடேஜா பேட்டிங்கில் சதம் மற்றும் பந்துவீச்சில் 7 விக்கெட் வீழ்த்தி ஆசத்தி இருந்தார்.

இந்த நிலையில் கிரிக்கெட்டில் ஜடேஜா கொடி கட்டி பறந்தாலும் சொந்த வாழ்க்கையில் கடுமையாக தடுமாறி வருகிறார். ஜடேஜா குடும்பத்தில் ஒரு பெரிய பிளவே ஏற்பட்டு இருக்கிறது. இதற்கு காரணம் அவருடைய மனைவி ரிவாபா தான். ரிவாபாவின் செயலால் ஜடேஜாவும் தற்போது அவருடைய குடும்பத்தினரும் பிரிந்து விட்டனர்.

Ind vs Eng - Ravindra jadeja tries to cool his wife by dedicating his man of the match award

தன்னுடைய மகனை என்னுடைய மருமகள் பிரித்து விட்டதாக குற்றம் சாட்டியுள்ள ஜடேஜா தந்தை, சொத்தை பிரித்து கேட்பதாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும் தன்னுடைய மகனையும் பேரக் குழந்தைகளையும் பார்க்க அனுமதிப்பதில்லை என்றும் ரிவாபாவை ஜடேஜா தந்தை சாடி இருக்கிறார். இதனால் ரிவாபா ஜடேஜா குடும்பத்தினர் மீது கடும் கோபத்தில் இருக்கிறார்.

ஜடேஜா தனது சொந்த மண்ணில் இந்தியாவுக்காக விளையாடிய போதிலும் இந்த போட்டியை ரிவாபாவும் வந்து காணவில்லை. ஜடேஜாவின் தந்தையும் வந்து பார்க்கவில்லை. இந்த நிலையில் கோபமாக இருக்கும் மனைவியை கூல் செய்யும் விதமாக ஜடேஜா ஒரு விஷயத்தை சொல்லி இருக்கிறார். அதில் அந்த மண்ணில் ரசிகர்களுக்கு முன்பு விளையாடி ரன்கள் விக்கெட்டுகளை எடுத்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.

இந்த ஆட்டநாயகன் விருதை என்னுடைய மனைவிக்கு நான் சமர்ப்பிக்கிறேன். அவர் கடுமையாக உழைத்து வருகிறார். என்னுடைய செயல்பாடுகளுக்கு அவருடைய ஆதரவு தான் முழு காரணம். எனக்கு மனதளவில் அவர் நம்பிக்கை கொடுக்கிறார் என்று அவரை பாராட்டினார். ஏற்கனவே தன்னுடைய மனைவியை குற்றம் சாட்டியதால் தனது தந்தையையே ஜடேஜா கடுமையாக சாடியிருந்தார். தன்னுடைய தந்தை சொன்ன குற்றச்சாட்டுகள் எல்லாம் அடிப்படை ஆதாரமற்றவை என்று தன்னுடைய மனைவிக்காக அவர் ஆதரவு தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் தந்தையா? மனைவியா என்று வந்தவுடன் ஜடேஜா மனைவி பக்கம் திரும்பி விட்டதாக ரசிகர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். மேலும் இதற்கு பதில் அளித்துள்ள திருமணமான ஆண்கள் கல்யாணம் ஆனாலே இந்த பிரச்சனை அனைவருக்கும் வரும் என்றும் நமது குடும்ப உறுப்பினர்கள் மீது மனைவி கோபமாக இருந்தால் இவ்வாறு தான் எதையும் செய்து கூல் செய்ய வேண்டும் என்று ஜடேஜாவை பார்த்து கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Story first published: Tuesday, February 20, 2024, 13:27 [IST]
Other articles published on Feb 20, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+