For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

IND vs ENG: 4 நாள் ஆதிக்கம் செலுத்தியும் இந்தியா தோற்றது எப்படி? தோல்விக்கான காரணங்கள் என்ன?

லீட்ஸ்: இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அதிர்ச்சி தோல்வியை தழுவி இருக்கிறது. இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 471 ரன்கள் குவிக்க இங்கிலாந்து அணி 465 ரன்கள் எடுத்தது. இதை அடுத்து ஆறு ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 364 ரன்கள் எடுத்தது.

இதனை அடுத்து 371 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி கடைசி நாள் ஆட்டத்தில் விளையாடியது. விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள் என்ற ஸ்கோருடன் ஐந்தாவது நாள் ஆட்டத்தை தொடர்ந்த இங்கிலாந்து அணியில் பென் டக்கட் அபாரமாக விளையாடி 149 ரன்கள் குவித்தார்.

Ind vs Eng

இதன் காரணமாக இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த நிலையில் இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணம் என்ன என்பதை தற்போது பார்க்கலாம். இந்திய அணி இந்த டெஸ்ட் போட்டியில் மொத்தமாக ஐந்து சதம் அடித்தும் தோல்வியை தழுவி இருக்கின்றது. இதற்கு காரணம் இந்திய வீரர்களின் டாப் ஆர்டர் சிறப்பாக செயல்பட்டாலும், கீழ் வரிசை வீரர்கள் சொதப்பியது தான் தோல்விக்கு முக்கிய காரணம்.

குறிப்பாக முதல் இன்னிங்ஸில் 430 ரன்கள் எடுத்திருந்தபோது சுப்மன் கில் ஆட்டம் இழந்தார். அது இந்திய அணி இழந்த நான்காவது விக்கெட் ஆகும். ஆனால் அடுத்த 31 ரன்கள் சேர்ப்பதற்குள் இந்திய அணி ஆறு விக்கெட்டுகளை இழந்து 471 ரன்களில் எல்லாம் சுருண்டது. ஒருவேளை இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 500 ரன்களுக்கு மேல் குவித்து இருந்தால் ஒரு வேலை இந்தியா இந்த போட்டியை சமன் செய்திருக்கலாம்.

இதே போன்று ஒரு சூழ்நிலை இரண்டாவது இன்னிங்ஸிலும் வந்தது. ராகுல் ஆட்டம் இழந்த போது இந்திய அணியின் ஸ்கோர் 333 ரன்கள் விக்கெட் என்ற நிலையில் இருந்தது. ஆனால் 364 ரன்கள் எல்லாம் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி சுருண்டது. கருண் நாயர், ஜடேஜா, சர்துல் தாக்கூர், சிராஜ், பும்ரா போன்ற வீரர்கள் எல்லாம் கொஞ்சம் கூட நிலைத்து நின்று ஆடவில்லை.

இதில் குறிப்பாக இந்திய அணியின் மூன்று பவுலர்களும் டக் அவுட் ஆனார்கள். இது தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. ஒருவேளை இந்திய அணி ஐந்தாவது நாள் மதியம் வரை விளையாடி இருந்தால் இந்த போட்டியை சமன் செய்திருக்கலாம். ஆனால் கீழ் வரிசையில் யாருமே நிலைத்து நின்று விளையாடவில்லை.

சரி அடித்த இலக்கை வைத்து ஏன் வெற்றி பெறவில்லை என்று கேள்வி கேட்டால், அதற்கு முக்கிய காரணம் மோசமான பில்டிங் தான். டெஸ்ட் போட்டிகளில் கேட்ச் என்பது மிகவும் முக்கியம். ஆனால் இந்திய வீரர் ஜெய்ஸ்வால் இந்த போட்டியில் மட்டும் மூன்று கேட்ச்களை தவற விட்டிருக்கிறார். அதில் குறிப்பாக கடைசி இன்னிங்ஸில் பென் டக்கட் 98 ரன்கள் எடுத்திருந்தபோது அவர் அடித்த கேட்ச் வாய்ப்பை ஜெய்ஸ்வால் தவறவிட்டார்.

ஒருவேளை அந்த கேட்சை அவர் பிடித்து இருந்தால், ஆட்டம் தலைக்கீழ் மாறி இருக்கும். ஆனால் அதன் பிறகு பென் டக்கட் 149 ரன்கள் சேர்த்து தான் ஆட்டம் இழந்தார். இதேபோன்று இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்லுக்கு போதுமான அனுபவம் இல்லை என்பது தெளிவாகிவிட்டது.

இதை போல் ஒரு சூழ்நிலையில் விராட் கோலியோ, ரோகித் சர்மாவோ இருந்திருந்தால் நிச்சயம் ஃபில்டர்களை வித்தியாசமாக நிறுத்தி வேகப்பந்து வீச்சாளர்களை ஊக்கவித்து விக்கெட்டுகளை வேட்டையாடி இருப்பார்கள். ஆனால் கில் அதை செய்யவே இல்லை. இதை போன்று புது பந்து கிடைத்தவுடன் பும்ராவை பயன்படுத்தலாம் என அவர் நினைத்திருந்தார். ஆனால் புது பந்து கிடைத்த போது இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு வெறும் 20 ரன்கள் கிட்ட தான் தேவையாக இருந்தது.

இப்படி இந்திய அணி இந்த டெஸ்ட் போட்டியில் நான்கு நாள் ஆதிக்கம் செலுத்தியும் சிறுசிறு தவறுகள் செய்ததால் தான் இங்கிலாந்து அபாரமாக வென்று அசத்தி இருக்கிறது. இதேபோன்று முதல் இன்னிங்ஸில் பும்ரா ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தி இருந்தார். ஆனால் இரண்டாவது இன்னிங்ஸில் பும்ரா எந்த ஒரு விக்கெட்டையும் எடுக்கவில்லை. இதுவும் தோல்விக்கு ஒரு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. பும்ரா குறைந்தபட்சம் ஒரு மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தி இருந்தால் இந்த போட்டியில் இந்தியா வெற்றியை பெற்றிருக்கலாம். இதேபோன்று ஜடேஜா இந்த டெஸ்ட் போட்டியில் மொத்தமாகவே ஒரு விக்கெட் தான் வீழ்த்தி இருந்தார். அதுவும் ஒரு பெரிய குறையாக பார்க்கப்படுகிறது.

Story first published: Tuesday, June 24, 2025, 23:24 [IST]
Other articles published on Jun 24, 2025
English summary
Ind vs Eng- Reason For India loss in first Test after hits 5 centuries
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+