For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அந்த மெர்சிடஸ் கார் விலை என்ன சார்.. 18 வயதிலேயே கேட்ட ரோகித் சர்மா.. வியக்க வைக்கும் கான்ஃபிடன்ஸ்!

மும்பை : இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா சிறு வயதிலேயே பல கோடி மதிப்பிலான மெர்சிடஸ் காரினை வாங்குவேன் என்று பயிற்சியாளரிடம் கூறிய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மா அடுத்தடுத்து வெற்றிகளை குவித்து வருகிறார். சொந்த மண்ணில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரை இழந்தாலும், அடுத்தடுத்து டெஸ்ட் தொடர்களில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்த காரணமாக உள்ளார். விராட் கோலி, பும்ரா, முகமது ஷமி, கேஎல் ராகுல் உள்ளிட்ட அனுபவ வீரர்கள் இல்லாமல் இளம் படையுடன் இங்கிலாந்து அணியை வீழ்த்தி காட்டியுள்ளார் ரோகித் சர்மா.

IND vs ENG : Rohit Sharma Childhood coach shares about the Mercedes car story of Hitman in his early times

இதன் மூலமாக இந்திய அணி சொந்த மண்ணில் தொடர்ச்சியாக 17 டெஸ்ட் தொடர்களில் வென்று அசத்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்திய மண்ணில் கடைசியாக ஆடிய 50 டெஸ்ட் போட்டிகளில் வெறும் 4 போட்டிகளில் மட்டுமே இந்திய அணி தோல்வியடைந்துள்ளது. விராட் கோலியை தொடர்ந்து ரோகித் சர்மாவின் டெஸ்ட் கேப்டன்சியும் இந்திய அணிக்கு சாதகமாக இருப்பதையே இந்த டேட்டாக்கள் வெளிக்காட்டுகின்றன.

இந்த நிலையில் சிறுவயதிலேயே ரோகித் சர்மா பல கோடி மதிப்பிலான மெர்சிடஸ் காரை வாங்குவேன் என்று பயிற்சியாளரிடம் கூறியுள்ளார். இந்த சம்பவம் குறித்து ரோகித் சர்மாவின் சிறுவயது பயிற்சியாளரான தினேஷ் ஜவஹர் கூறுகையில், மெர்சிடஸ் கார் பார்க் செய்யப்பட்டிருந்த ஒரு இடத்தில் நானும் ரோகித் சர்மாவும் நின்று கொண்டிருந்தோம். அப்போது ரோகித் சர்மா மும்பை யு19 அணிக்காக தேர்வு செய்யப்பட்டிருந்தார்.

அப்போது என்னிடம், சார்.. இந்த காரை வாங்க விரும்புகிறேன்.. அது சாத்தியமாகும் என்று நினைக்கிறீர்களா? என்று கேட்டார். அதற்கு நான், நீ இதுவரை பெரிதாக எந்த அணிக்காகவும் விளையாடவில்லை. ஆனால் மெர்சிடஸ் கார் வாங்க வேண்டுமா? என்று மறுகேள்வி எழுப்பினேன். ஆனால் ரோகித் சர்மா மிகுந்த நம்பிக்கையுடன், நிச்சயம் மெர்சிடஸ் காரினை வாங்குவேன் என்று கூறினார். அவருக்கு நிச்சயம் மிகப்பெரிய கிரிக்கெட் வீரராக வருவேன் என்ற நம்பிக்கை இருந்ததாக தெரிவித்துள்ளார்.

தற்போது ரோகித் சர்மாவிடம் விலையுயர்ந்த பல்வேறு கார்கள் உள்ளன. ரூ.56.50 லட்சம் மதிப்பிலான பிஎம்டபிள்யூ எக்ஸ்3, ரூ.1.55 கோடி மதிப்பிலான பிஎம்டபிள்யூ எம்5, ரூ.88.18 லட்சம் மதிப்பிலான மெர்சிடஸ் ஜிஎல்எஸ் 350டி, ரூ.4.22 கோடி மதிப்பிலான லாம்போர்கினி என்று விலையுயர்ந்த பல்வேறு கார்களை வைத்துள்ளார். மேலும் மனைவி ரித்திகாவுடன் ஷாப்பிங் செல்லும் போது ரோகித் சர்மா விலையுயர்ந்த கார்களை பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, February 28, 2024, 13:09 [IST]
Other articles published on Feb 28, 2024
English summary
IND vs ENG : Rohit Sharma Childhood coach shares about the Mercedes car story of Hitman in his early times
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+