For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ரோஹித் செய்த செயல்.. கதறிய இங்கிலாந்து.. உற்சாகத்தில் மிதந்த ரசிகர்கள்.. 30 பந்துகளில் அரைசதம்

கட்டாக்: ரோஹித் சர்மா நீண்ட காலமாக ஃபார்ம் அவுட்டில் இருந்த நிலையில், இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் தனது ஃபார்மை மீட்டெடுத்துள்ளார். அதுவும் சாதாரணமாக அல்ல, 30 பந்துகளில் அரை சதம் அடித்து தனது ஃபார்மை மீட்டெடுத்துள்ளார். அதைத் தொடர்ந்து அவர் 76 பந்துகளில் சதம் அடித்தார். இது அவரது 32 வது ஒருநாள் போட்டி சதமாக அமைந்தது.

இந்தப் போட்டியில் சரமாரியாக சிக்ஸர்களை விளாசிய அவர் அரை சதம் அடித்தார். அவரது அதிரடியால் இந்திய அணி 10 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 77 ரன்களை எட்டியது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்தப் போட்டியில் ரோஹித் சர்மா தனது மூன்றாவது அதிவேக அரை சதத்தையும், ஒருநாள் போட்டிகளில் 58வது அரை சதத்தையும் நிறைவு செய்து தன்னை விமர்சித்தவர்களுக்கு பதிலடி கொடுத்தார்.

ind vs eng rohit sharma india england

ரோஹித் சர்மா அரை சதம் அடித்தபோது ஒட்டுமொத்த மைதானமும் கரகோஷம் எழுப்பி உற்சாகத்தில் மிதந்தது. சில மாதங்களுக்கு பின்பு ரோஹித் சர்மா சிறந்த ஆட்டத்தை ஆடியிருக்கிறார். இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 304 ரன்கள் எடுத்தது.

305 ரன்கள் என்ற சவாலான இலக்கை நோக்கி இந்திய அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது. சுப்மன் கில் மற்றும் ரோஹித் சர்மா துவக்க வீரர்களாக களம் இறங்கினர். அப்போது ரோஹித் சர்மா அதிக ரன் குவிக்க வேண்டும் என்ற பதற்றம் ரசிகர்களுக்கு இருந்தது. கடந்த சில மாதங்களாக அவர் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்த காட்சிகள் அனைவருக்கும் நினைவுக்கு வந்தது.

ஆனால் அவற்றை எல்லாம் அடுத்த சில நிமிடங்களில் அடித்து நொறுக்கினார் ரோஹித். சரமாரியாக சிக்ஸர்களை விளாசி அவர் 30 பந்துகளில் அரை சதம் அடித்தார். ஒரு நாள் போட்டிகளில் அவர் அடித்த மூன்றாவது அதிவேக அரை சதமாக இது அமைந்தது.

இதற்கு முன் 2022 இல் வங்கதேச அணிக்கு எதிராக 27 பந்துகளில் அரை சதம் அடித்திருந்தது ரோஹித் சர்மாவின் அதிவேக அரை சதமாக உள்ளது. அடுத்து இலங்கை அணிக்கு எதிராக 2024 ஆம் ஆண்டு 29 பந்துகளில் அரை சதம் அடித்திருந்தார். அதைத் தொடர்ந்து 2023 ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக 30 பந்துகளில் அரை சதம் அடித்திருந்தார்.

தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக அதே போல முப்பது பந்துகளில் அரை சதம் அடித்து அசத்தியிருக்கிறார். இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவெனில் அவர் அடித்த அதிவேக அரை சதங்கள் அனைத்துமே கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டுமே நடந்துள்ளது. வயதாகி விட்டது என்ற விமர்சனம் இருக்கும் நிலையில் அதிரடி பேட்ஸ்மேனாக முத்திரை பதித்து இருக்கிறார் ரோஹித். அதன் பின்னரும் வெறியாட்டம் ஆடிய ரோஹித் சர்மா 76 பந்துகளில் சிக்ஸ் அடித்து தனது சதத்தை எட்டினார்.

Story first published: Sunday, February 9, 2025, 20:20 [IST]
Other articles published on Feb 9, 2025
English summary
IND vs ENG: Rohit Sharma hit 30 ball fifty; his third fastestt half century in ODI
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+