Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs ENG: வெறும் 134 ரன்கள் தான் தேவை.. மாபெரும் சச்சின் சாதனையை முறியடிக்க போகும் ரோகித் சர்மா

நாக்பூர் : இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரின் இந்திய அணி நான்கிற்கு ஒன்று என்ற கணக்கில் கைப்பற்றிய நிலையில், தற்போது ஒரு நாள் தொடர் வரும் ஆறாம் தேதி நாக்பூரில் தொடங்குகிறது. மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ரோஹித் சர்மா தலைமையில் விராட் கோலி, ஸ்ரேயாஸ், கே எல் ராகுல், பண்ட், ஹர்திக் பாண்டியா போன்ற நட்சத்திர வீரர்கள் களமிறங்குகின்றனர்.

கடந்த 2024 ஆம் ஆண்டு இந்திய அணி மூன்றே மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் தான் விளையாடி அதில் ஒன்றில் கூட இந்தியா வெற்றி பெறவில்லை. இதனால் ஒருநாள் தொடரில் மீண்டும் தங்களுடைய ஆதிக்கத்தை செலுத்துவதற்காக இந்திய அணி களமிறங்குகிறது.

ind vs eng rohit sharma virat kohli

சாம்பியன்ஸ் கோப்பை தொடர் வரும் 19ஆம் தேதி தொடங்குவதால் அந்த தொடருக்கு இது ஒரு நல்ல பயிற்சி களமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ந்து தடுமாறி வரும் ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் இழந்த மானத்தை ஒருநாள் கிரிக்கெட்டில் ரன்கள் அடித்து மீட்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுக்காக ரோஹித் சர்மா தலைமையிலான அணி நாக்பூரில் முகாமிட்டு பயிற்சி செய்து வருகிறது. t20 கிரிக்கெட்டிலே 200 ரன்களுக்கு மேல் அடிக்கப்பட்டதால், ஒரு நாள் கிரிக்கெட்டில் 300 ,400 ரன்கள் அசால்ட்டாக இந்த தொடரில் அடிப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் ரோகித் சர்மா ஒரு மகத்தான சாதனையை எதிர்நோக்கி இருக்கிறார்.

தற்போது ரோகித் சர்மா சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 257 இன்னிங்ஸில் 10866 ரன்கள் அடித்திருக்கிறார்.இதில் 31 சதம், 57 அரை சதம் அடங்கும். இன்னும் ரோகித் சர்மா அடுத்த 19 இன்னிங்ஸ்களில் 134 ரன்கள் எடுத்தால் சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் 2வது அதிவேகமாக 11 ஆயிரம் ரன்கள் எட்டிய சச்சினின் சாதனையை முறியடிப்பார்.

அதி வேகமாக 11 ஆயிரம் ரன்களை எட்டிய வீரர்கள் பட்டியலில் விராட் கோலி 252 வது இன்னிங்ஸில் இரந்த சாதனையை படைத்த நிலையில் சச்சின் டெண்டுல்கர் 276 இந்த மைல் கல்லை எட்டினார். தற்போது ரோகித் சர்மா 257 இன்னிங்ஸ் மட்டும் தான் விளையாடி இருக்கிறார். இந்த இங்கிலாந்து தொடரிலே 11 ஆயிரம் ரன்களை ரோகித் சர்மா எட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் ரோஹித் சர்மா நல்ல பார்மில் இருந்தால் மட்டுமே அது சாத்தியமாகும். இல்லை என்றால் இந்த 11 ஆயிரம் ரன்கள் எடுக்க முடியாமல், அவர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் விட்டு ஓய்வு பெறலாம். இதனால் ரோகித்துக்கு இந்த தொடரும், சாம்பியன்ஸ் டிராபியும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தொடர்களாக பார்க்கப்படுகிறது.

Story first published: Tuesday, February 4, 2025, 10:00 [IST]
Other articles published on Feb 4, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+