Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs ENG: ரோகித் சர்மா மீண்டும் சொதப்பல்.. 2 ரன்களில் அவுட்.. கடைசி 10 இன்னிங்ஸ் பேட்டிங் பரிதாபம்

நாக்பூர் : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா இரண்டு ரன்கள் ஆட்டம் இழந்து இருப்பது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது. கடந்த ஆறு மாதமாக இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கில் தடுமாறி வருகிறார்.

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மொத்தமாக 6 இன்னிங்ஸில் 91 ரன்கள் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மொத்தமாக 31 ரன்கள் என ரோகித் சர்மா மோசமாக விளையாடி வருகிறார்.

ind vs eng rohit sharma virat kohli

இதன் காரணமாக ரோகித் சர்மா மீது பிசிசிஐ நிர்வாகிகள் கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள். இந்த நிலையில் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் ரோஹித் சர்மா தன்னுடைய திறமையை நிரூபித்து இந்திய அணிக்கு கோப்பையை வென்று தரவில்லை என்றால், அவர் அதிரடியாக அணியிலிருந்து நீக்கப்படுவார் என்று தேர்வுக்குழு எச்சரிக்கை விடுத்து இருந்ததாக செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் ரோகித் சர்மா ரஞ்சி போட்டியிலும் விளையாடி பயிற்சி பெற்றார். ஆனால் அதிலும் அவர் 30 ரன்களை கூட தாண்டவில்லை. ஒரு நாள் கிரிக்கெட்டுக்கு ரோகித் சர்மா ஆறு மாதம் கழித்து திரும்பினார். இதனால் ரோகித் சர்மா தனக்கு பிடித்த பார்மட்டில் பட்டையை கிளப்புவார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

ரோகித் சர்மா இன்று பெரிய இன்னிங்ஸ் ஆடி பார்ம்க்கு திரும்புவார் என்று அவருடைய ரசிகர்களுமே நம்பிக்கை உடன் இருந்தனர். ஆனால் வழக்கம் போல் ரோகித் சர்மா இன்று ஏழு பந்துகளை எதிர்கொண்டு வெறும் இரண்டு ரன்களில் ஆட்டம் இழந்தார்.ரோகித் சர்மா, கடந்த 10 இன்னிங்ஸ்களாக இந்திய அணிக்காக விளையாடி ஒருமுறை கூட 20 ரன்கள் தொடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

0,8,18,1,3,6,10,3,9,2 ஆகிய ரன்களை தான் ரோகித் சர்மா இந்திய அணிக்காக அடித்திருக்கிறார். இதனால் ரோகித் சர்மா இந்திய அணியில் இருந்து அதிரடியாக நீக்கப்படுவார் என்ற அபாயம் எழுந்துள்ளது. ரோகித் சர்மா இதேபோல் விளையாடி வந்தால் சாம்பியன்ஸ் கோப்பை தொடர்தான் அவருக்கு கடைசியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, February 6, 2025, 18:48 [IST]
Other articles published on Feb 6, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+