Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என்ன தவறு செய்தோம் என்பதை உங்களிடம் விவரிக்க முடியாது.. இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா காட்டம்

அகமதாபாத் : இந்திய அணியின் கேப்டனாக கடந்த ஆறு மாதமாக ரோகித் சர்மா மிகப்பெரிய சரிவை சந்தித்த நிலையில், தற்போது சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு முன்பு இங்கிலாந்து அணியை ஒயிட்வாஷ் செய்து இழந்த பெருமையை மீட்டு இருக்கிறார். இதனால் ரோஹித் சர்மா கேப்டன் ஆக இன்னும் ஜொலித்துக் கொண்டுதான் இருக்கிறேன் என்பதை ரசிகர்களுக்கு மீண்டும் நிரூபித்து இருக்கிறார்.

தொடரை கைப்பற்றியது மட்டுமல்லாமல் இரண்டாவது ஒருநாள் போட்டியில் அதிரடியாக சதம் விளாசியும் ரோகித் சர்மா அசத்திருக்கிறார். இந்த நிலையில் வெற்றி பெற்ற பிறகு பேசிய கேப்டன் ரோகித் சர்மா, இங்கிலாந்து தொடர் சவால்கள் நிறைந்ததாக இருக்கும் என்று தான் நினைத்த நிலையில் தொடரைக் கைப்பற்றியது மகிழ்ச்சியை கொடுத்திருப்பதாக கூறியுள்ளார்.

ind vs eng rohit sharma virat kohli shubman gill

இது குறித்து பேசி அவர், எங்கள் முன் பல சவால்கள் வீசப்பட்டது. அதை நாங்கள் அனைவரும் சிறப்பாக எதிர் கொண்டு வெற்றி பெற்றிருக்கிறோம். இன்றைய ஆட்டத்தில் நான் ஒரு அபாரமான பந்தில் தான் ஆட்டம் இழந்தேன். பவுலர்கள் எப்போதுமே பேட்ஸ்மேன்களின் விக்கெட்டை எடுக்க தான் பந்து வீசுகிறார்கள். சில சமயம் அதிர்ஷ்டம் இருந்தால் நாங்கள் தப்பி பிழைத்து விடுவோம்.

சில சமயம் பந்து பேட்டில் பட்டு கேட்ச் ஆக கூடும். அதைப் பற்றி ஒன்னும் செய்ய முடியாது. இந்த தொடரில் நாங்கள் பெரிய அளவில் எந்த தவறையும் செய்யவில்லை. ஆனால் சில இடங்களில் நாங்கள் இன்னும் கவனம் செலுத்த வேண்டும். அது என்னவென்று இப்போது உங்கள் முன் நின்று என்னால் விளக்கிக் கொண்டிருக்க முடியாது.அணியில் உள்ள ஒவ்வொரு வீரர்களும் உத்வேகத்துடன் தொடர்ந்து சிறப்பாக விளையாட வேண்டும்.

நாங்கள் என்ன நினைக்கின்றோம் என்பதை வீரர்களிடம் தெளிவாக சொல்லிவிடுகிறோம். ஒரு சாம்பியன் அணி உருவாக வேண்டும் என்றால் ஒவ்வொரு போட்டியிலும் அவர்கள் தங்களின் மெருகேற்றிக் கொண்டு முன் நோக்கி நகர்ந்து செல்ல வேண்டும். இன்றைய ஆட்டத்தில் நாங்கள் அடித்த ஸ்கோர் குறித்து எனக்கு மகிழ்ச்சியை தந்தது. இதன் மூலம் நாங்கள் பந்து வீச அதிக ரன்கள் இருந்தது. எங்கள் அணியில் உள்ள ஒவ்வொரு வீரர்களுக்கும் முழு சுதந்திரத்தை நாங்கள் அழைக்கின்றோம்.

உங்களுக்கு எப்படி இஷ்டமோ, அதே போல் விளையாடுங்கள் என்று தான் நான் கூறி வருகின்றேன். இதை தான் நாங்கள் உலகக்கோப்பை தொடரிலும் செய்தோம். இதை தான் நாங்கள் இனிவரும் தொடர்களிலும் செய்வோம். சில சமயங்கள் இதுபோல் இருக்கும்போது, சில போட்டிகளில் நம்மால் வெற்றி பெற முடியாது. ஆனால் அதைப் பற்றி கவலை இல்லை என ரோகித் சர்மா கூறியுள்ளார்.

Story first published: Wednesday, February 12, 2025, 21:18 [IST]
Other articles published on Feb 12, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+