Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs ENG - ரோகித் சர்மாவின் சாதனையை கவனச்சீங்களா? கங்குலி ரெக்கார்ட் காலி

ஐதராபாத் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா மகத்தான சாதனை ஒன்றை படைத்திருக்கிறார். ஐதராபாத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 246 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதனை அடுத்து களமிறங்கிய இந்திய அணியில் ஜெய்ஸ்வால் அபாரமாக விளையாடி 80 ரன்கள் சேர்க்க பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரோகித் சர்மா 24 ரன்களிலும், கில் 23 ரன்களிலும் வெளியேறினார்.

Ind vs Eng - Rohit sharma surpasses sourav ganguly for Most international runs

கே எல் ராகுல் அபாரமாக விளையாடி 86 ரன்கள் சேர்த்தார். இறுதியில் ஜடேஜாவும் அரைசதம் கடக்க இந்திய அணி 100 ரன்களுக்கு மேல் குவித்து இருக்கிறது. இந்த நிலையில் ரோகித் சர்மா 24 ரன்களில் வெளியேறினாலும் ஒரு மகத்தான சாதனையை படைத்திருக்கிறார். அதன்படி சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் முன்னாள் கேப்டன் கங்குலியின் சாதனையை ரோகித் சர்மா முறியடித்திருக்கிறார்.

கங்குலி 18,433 ரன்கள் அடித்துள்ள நிலையில் தற்போது ரோகித் சர்மா 18,44 ரன்கள் அடித்து பட்டியலில் நான்காவது இடத்தில் முன்னேறி இருக்கிறார். சச்சின் டெண்டுல்கர் 34,357 ரன்கள் அடித்து முதல் இடத்திலும் ,விராட் கோலி 26 ஆயிரத்து 733 அடித்து இரண்டாவது இடத்திலும் ராகுல் டிராவிட் 24064 ரன்கள் அடித்து மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.

நான்காவது இடத்தில் ரோகித் சர்மாவும், ஐந்தாவது இடத்தில் கங்குலியும் உள்ள நிலையில் ஆறாவது இடத்தில் முன்னாள் கேப்டன் தோனி இருக்கிறார். இவர் 17092 ஆகிய இடங்கள் அடித்து இருக்கிறார். இதேபோன்று ஏழாவது இடத்தில் 16,892 ரன்கள் எடுத்து இருக்கிறார்.

இந்தத் தொடரில் விராட் கோலி தற்போது இல்லாத நிலையில் ரோகித் சர்மாவுக்கு அதிக பொறுப்பு இருக்கிறது. சீனியர் வீரர்களில் ரோகித் சர்மா மட்டும்தான் தற்போது இருக்கிறார் என்பதால் அவர் அதிக ரன்கள் எடுத்தால் மட்டுமே இங்கிலாந்துக்கு கடும் சவால் கொடுக்க முடியும்.

Story first published: Friday, January 26, 2024, 17:08 [IST]
Other articles published on Jan 26, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+