Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆஹா.. இது அதுல்ல! 2023 பைனலில் ரோகித் பயன்படுத்திய அதே வார்த்தை.. ரெடியா இருந்துக்க டா கைப்புள்ள!

கயானா : டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் அரை இறுதி நாக் அவுட் சுற்றில் இந்திய அணி பலம் வாய்ந்த நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் மழை குறுக்கிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் டாசை வென்ற கேப்டன் ஜாஸ் பட்லர் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதன் மூலம் போட்டி நடைபெறும் போது மழை குறுக்கிட்டால் டக்வொர்த் லூயிஸ் விதி பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இதன் காரணமாக முதலில் பந்து வீசுவதே சிறந்தது என்ற முடிவில் ஜாஸ் பட்லர் இருக்கிறார். இந்த நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ரோகித் சர்மா, டாஸ் எப்படியாக இருந்தாலும் தாம் முதலில் பேட்டிங் செய்ய தான் இருந்ததாக கூறினார்.

t20 world cup ind vs eng rohit sharma

இதனால் டாசை இழந்தது குறித்து கவலை இல்லை என்பது போல் ரோகித் சர்மா பேசியிருக்கிறார். ரோகித் சர்மாவின் இந்த பேச்சு தான் தற்போது ரசிகர்களின் வயிற்றை கலக்க வைத்திருக்கிறது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ரசிகர்கள், ரோகித் சர்மா இதே போல் ஒரு வசனத்தை தான் 2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பை இறுதி போட்டியில் பேசியதாக தெரிவித்துள்ளனர்.

நடப்பு டி20 உலகக்கோப்பை போல் 2023 50 ஓவர் உலகக் கோப்பையிலும் இந்திய அணி எந்த ஒரு போட்டியிலும் தோற்காமல் இறுதிப் போட்டி வரை வந்தது. அகமதாபாத்தில் நடைபெற்ற அந்த ஆட்டத்தில் தற்போது போல் இந்திய அணி டாசை இழந்தது. ஆனால் அப்போது இதே ஒரு வசனத்தை தான் ரோகித் சர்மா பேசியிருக்கிறார்.

டாசை இழந்தது குறித்து கவலை இல்லை என்றும் தாங்கள் முதலில் பேட்டிங் செய்ய தான் வந்தோம் என்றும் அதிக ரன்களை குவித்து ஆஸ்திரேலிய அணிக்கு நெருக்கடி கொடுப்போம் என்று அப்போது ரோகித் பேசினார். தற்போது அதே வசனத்தை ரோகித் சர்மா பயன்படுத்தியிருப்பதால் இன்றைய ஆட்டத்தின் முடிவும் 2023 உலகக் கோப்பை இறுதி போட்டி போல் மாறிவிடுமோ என்று ரசிகர்கள் கிண்டல் அடித்து வருகின்றனர்.

எனினும் கயானா ஆடுகளம் தோய்வாக மாற வாய்ப்பு இருப்பதால், முதலில் பேட்டிங் செய்வதை நல்லது என்று கிரிக்கெட் வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதனால் ரசிகர்கள் நம்பிக்கையை இழந்து விடாமல் இந்திய அணிக்கு ஆதரவாக குரல் கொடுப்போம் இந்திய அணிக்கு ஆதரவாக குரல் கொடுப்போம்.

Story first published: Thursday, June 27, 2024, 21:21 [IST]
Other articles published on Jun 27, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+