Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"ரோஹித்துக்கு டயாப்பர் மாற்றும் வேலை இருக்கு".. ஓபனாக பேசிய ஆடம் கில்கிறிஸ்ட்.. என்ன சொன்னார்?

சிட்னி: இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா டெஸ்ட் போட்டிகளில் இருந்து தான் ஓய்வு பெறவில்லை என கூறினாலும், தனது வீட்டில் இரண்டு மாத குழந்தைக்கு டயாப்பர் மாற்றும்போது மீண்டும் இங்கிலாந்து அணிக்கு எதிராக விளையாட வேண்டும் என தோன்றும். ஆனால் அது நடக்காது என முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் அடம்ஸ் ஆடம் கில்கிறிஸ்ட் கூறி இருக்கிறார்.

சமீபத்தில் நடந்த முடிந்த ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1 - 3 என தோல்வி அடைந்தது. இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஐந்தாவது டெஸ்ட் போட்டிக்கு முன் தாமாகவே விலகினார். அத்துடன் அவர் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தான் இன்னும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறவில்லை என ரோஹித் சர்மா விளக்கம் அளித்தார்.

ind vs aus rohit sharma india vs australia test match

இந்திய அணி அடுத்து 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது. அதற்கு முன் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது. அத்துடன் ரோஹித் சர்மா சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. அதை சுட்டிக்காட்டி பேசி இருக்கிறார் ஆடம் கில்கிறிஸ்ட்.

ரோஹித் சர்மா பற்றி கில்கிறிஸ்ட் பேசுகையில், "ரோஹித் சர்மா இங்கிலாந்துக்கு டெஸ்ட் தொடரில் பங்கேற்க செல்வார் என நான் நினைக்கவில்லை. அவர் இந்தியா திரும்பியவுடன் தனது நிலை என்ன என்பது குறித்து சிந்திப்பார் என நினைக்கிறேன். முதலில் அவர் வீட்டுக்கு சென்றவுடன் தனது இரண்டு மாத குழந்தைக்கு டயாப்பர் மாற்றுவார்."

"அப்போது இங்கிலாந்துக்கு செல்ல வேண்டும் என அவருக்கு தோன்றலாம். ஆனால், அது நடக்கும் என்று எனக்கு தெரியவில்லை. அவர் சாம்பியன்ஸ் ட்ராஃபியில் சரியாக விளையாட மாட்டார் என நினைக்கிறேன். அதன் பின் அவரை நாம் பார்க்க மாட்டோம்." என்று கூறி இருக்கிறார். அதாவது ரோஹித் சர்மா 2025 சாம்பியன்ஸ் ட்ராபி தொடருடன் ஓய்வு பெறுவார் என ஆடம் கில்கிறிஸ்ட் கூறி இருக்கிறார்.

Story first published: Friday, January 10, 2025, 16:30 [IST]
Other articles published on Jan 10, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+