Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs ENG: சிராஜ் நீங்கள் ஒரு சூப்பர்மேன்.. இந்தியாவின் வெற்றியால் மெய் சிலிர்க்கிறது- சச்சின் பாராட்டு

லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 2-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்திருக்கிறது. ஐந்தாவது நாளில் இங்கிலாந்து அணி வெற்றிக்கு வெறும் 35 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் இந்தியாவின் வெற்றிக்கு நான்கு விக்கெட்கள் எஞ்சி இருந்தது.

இந்த நிலையில் சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோர் அபாரமாக பந்து வீசி இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்தனர். குறிப்பாக சிராஜ் இரண்டாவது இன்னிங்ஸில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

Sachin Wishes Team India

கடைசி நிமிடம் வரை யார் வெற்றி பெறப் போகிறார்கள் என்ற விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் இந்த டெஸ்ட் போட்டி முடிந்தது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர், முகமது சிராஜை சூப்பர் மேன் உடன் ஒப்பிட்டு பாராட்டி இருக்கிறார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்த வெற்றியை நினைத்தாலே எனக்கு மெய் சிலர்கின்றது.

தொடர் இரண்டுக்கு இரண்டு என்ற கணக்கில் முடிவடைந்தாலும், இந்திய வீரர்களின் செயல்பாடு பத்துக்கு பத்து என்று சொல்லலாம். எப்படிப்பட்ட வெற்றி இது என்று சச்சின் டெண்டுல்கர் பாராட்டியுள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ரகானே, இதைவிட டெஸ்ட் கிரிக்கெட் சிறந்து விளங்க முடியாது. பரபரப்பாக இந்த போட்டி முடிந்து இருக்கின்றது. கடும் நெருக்கடியில் நமது அணி வீரர்கள் தங்களுடைய போர்க்குணத்தை காட்டியிருக்கிறார்கள்.

இந்திய அணிக்கு பாராட்டுக்கள் என்று கூறியுள்ளார்.இதை தொடர்ந்து கருத்து தெரிவித்துள்ள புஜாரா, வரலாற்று சிறப்புமிக்க வெற்றி இது. நமது அணி வீரர்கள் நம்பிக்கையும், போர் குணத்தையும் காட்டி இருக்கிறார்கள். இந்த சிறப்புமிக்க தொடருக்கு ஏற்ற முடிவாக இது அமைந்திருக்கின்றது. டெஸ்ட் கிரிக்கெட் போல் வேறு எதுவும் வராது என்று கூறியுள்ளார்.

இந்தியாவின் வெற்றி குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் அனில் கும்ப்ளே, இந்தியா சிறப்பாக விளையாடியிருக்கிறது. அற்புதமான தொடர் இது. இந்த தொடரில் விளையாடிய இரு அணி வீரர்களுக்கும் என்னுடைய பாராட்டுக்கள். சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணா நெருக்கடிகளை சமாளித்து அபாரமாக விளையாடி இருக்கிறார்கள்.இந்திய அணிக்கும் என்னுடைய பாராட்டுக்கள்.

இதனை தொடர்ந்து கருத்து தெரிவித்துள்ள சூரியகுமார், அபாரமான செயல்பாட்டை இந்தியா காட்டி இருக்கிறது. இந்திய வீரர்கள் வெளி காட்டிய செயல்பாடு பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கின்றது என்று பாராட்டியுள்ளார். சிராஜ், பிரசித் கிருஷ்ணாவை பாராட்டியுள்ள ஹர்பஜன்சிங் சிறந்த செயல்பாடுகளில் இது ஒன்று. இந்திய அணியின் சிறந்து வெற்றிகளில் இதுவும் ஒன்று. இந்திய அணியின் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு வீரர்களுக்கும் என்னுடைய பாராட்டுக்கள் என்று ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.

Story first published: Monday, August 4, 2025, 18:45 [IST]
Other articles published on Aug 4, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+