Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs ENG: லார்ட்ஸ் Honour board-ல் உங்க பெயர் இல்லையே? விமர்சகர் கிண்டல்.. பதிலடி தந்த சச்சின்

லண்டன்: கிரிக்கெட்டின் மெக்கா என்று அழைக்கப்படும் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் சச்சின் டெண்டுல்கரின் உருவப்படம் நேற்று திறந்து வைக்கப்பட்டது. அது மட்டுமில்லாமல் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதிய மூன்றாவது டெஸ்ட் போட்டியில் முதல் நாளை சச்சின் டெண்டுல்கர் பெல் அடித்து தொடங்கி வைத்தார்.

இந்த இரண்டு கௌரவம் அவருக்கு கிடைத்தது. இந்த சூழலில் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் பாரம்பரியமாக ஒரு பழக்கம் கடைபிடிக்கப்படுகிறது. அதாவது இங்கு நடைபெறும் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் ஏதேனும் ஒரு வீரர் சதம் அடித்தாலோ, இல்லை ஒரு பவுலர் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினாலோ அவர்களுடைய பெயர் ஹானர் போர்டு எனப்படும் கௌரவ பலகையில் எழுதப்படும்.

Sachin Tendulkar

இது காலத்தில் அழியாமல் இருக்கும். இந்த கௌரவ பலகையில் சச்சின் டெண்டுல்கரின் பெயரோ ரிக்கி பாண்டிங் பெயரோ இடம்பெற்றது கிடையாது. ஏனென்றால் லார்ட்ஸ் மைதானத்தில் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் சச்சின் சதம் அடித்தது கிடையாது. ஆனால் லார்ட்ஸ் மைதானத்தில் சதம் அடிக்காமலேயே சச்சினுக்கு இவ்வளவு பெரிய கௌரவம் கிடைத்தது சிலருக்கு புகைச்சலை ஏற்படுத்தியிருக்கும்.

இந்த சூழலில் தான் கிரிக்கெட் விமர்சகர் மார்க் நிக்கோலஸ், சச்சின் இடம் உங்களுடைய பெயர் லார்ட்ஸ் ஹானர் போர்டில் இடம்பெறவில்லையே? என்ன நடந்தது? இங்கிலாந்து அணியின் தரம் வாய்ந்த வேகப்பந்து வச்சு தான் காரணமா என்று கிண்டல் அடித்தார். இதற்கு சிரித்துக்கொண்டு பதிலடி கொடுத்த சச்சின், நான் லார்ட்ஸ் மைதானத்தில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் சதம் அடிக்கவில்லை.

ஆனால் 1998 ஆம் ஆண்டு ஒரு கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற்றது. அதில் மெக்கிராத் ஆலன் டொனால்ட், ஸ்ரீநாத், கும்ப்ளே மேக்மிலன் போன்ற தலைசிறந்த பவுலர்கள் அடங்கிய அணிக்கு எதிராக நான் சதம் அடித்தேன். ஆனால் நீங்கள் கேட்பது போல் சர்வதேச டெஸ்டில் அது நடைபெறவில்லை. ஒருவேளை இந்த பலகையில் என் பெயர் இடம்பெறாமல் போகும் என்ற (விதி) இருந்திருக்கிறது.

அதுதான் தற்போது நடந்துள்ளது என்று கூறினார்.இதேபோன்று கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு எம்சிசி அணிக்கும் இதர உலக லெவன் அணிக்கும் எதிரான ஒரு ஆட்டத்தில் சச்சின் டெண்டுல்கர் 125 ரன்கள் லார்ட்ஸ் மைதானத்தில் அடித்தார். ஆனால் அதுவும் சர்வதேச போட்டி இல்லை என்பதால் சச்சினின் பெயர் அந்தப் பலகையில் இடம் பெறவில்லை.

Story first published: Friday, July 11, 2025, 15:06 [IST]
Other articles published on Jul 11, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+