For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சொந்த மண்ணில் ஜடேஜாவுக்கு நிகழ்ந்த சோகம்.. கை கழுவிய தந்தை.. மைதானத்திற்கு வராத மனைவி

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபாரமாக விளையாடி ரன்களில் சேர்த்து இருக்கிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 33 ரன்கள் சேர்ப்பதற்குள் மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.அப்போது களத்திற்கு ரோகித் சர்மா உடன் சேர்ந்து ஜடேஜா ஆபாரமாக விளையாடி ரன்களை சேர்த்தார்.

ரோகித் சர்மா 132 ரன்களுக்கு ஆட்டம் இழக்க இந்த ஜோடி நான்காவது விக்கெட்டுக்கு 204 ரன்களை சேர்த்தது. இந்த நிலையில் அறிமுக டெஸ்டில் விளையாடிய சர்பிராஸ்கானை பார்க்க அவருடைய குடும்பத்தினர் மைதானத்திற்கு நேரில் வந்து போட்டியை பார்த்து மகிழ்ச்சி அடைந்தனர்.

Ind vs Eng - Sad state of Ravindra jadeja as no one from family didnt came to the staduim in home town

ஆனால் சொந்த மண்ணில் சர்வதேச போட்டியில் விளையாடிய ஜடேஜாவை பார்க்க அவர்கள் குடும்ப உறுப்பினர் யாருமே வராதது சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. எப்போதுமே ஒவ்வொரு கிரிக்கெட் வீரருக்கும் தன்னுடைய சொந்த மண்ணில் தன் குடும்பத்தினருக்கு எதிரே கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்பது சிறு வயதில் இருந்து கனவாக இருக்கும்.

இதனால் தான் ஜடேஜா காயம் அடைந்திருந்த போதிலும் மூன்றாவது டெஸ்டில் 100% உடல் தகுதியை எட்டி விட வேண்டும் என கடுமையாக உழைத்தார். மேலும் சொந்த மண்ணில் நன்றாக விளையாட வேண்டும் என்பதற்காக தன்னுடைய 100 சதவீதம் திறமையை வெளிப்படுத்தி கட்டுக்கோப்பான ஒரு ஆட்டத்தை ஆடினார். ஆனால் இந்த போட்டியை பார்த்து சந்தோஷப்பட ஜடேஜாவின் குடும்பத்திலிருந்து யாருமே நேரில் வரவில்லை.

இதற்கு காரணம் சில நாட்களுக்கு முன்புதான் ஜடேஜாவுக்கும் அவர்களுடைய குடும்பத்தினருக்கும் மிகப்பெரிய மோதல் ஏற்பட்டது. ஜடேஜா தன்னுடைய மனைவியின் பேச்சைக் கேட்டு தங்களுடன் பேசுவது இல்லை என்றும் சொத்தை கேட்டு வாங்க நினைப்பதாகவும் அவருடைய தந்தை மிகவும் சோகத்துடன் கூறினார்.

ஜடேஜா இப்படி மாறி விடுவார் என்று தெரிந்திருந்தால் தான் அவரை கிரிக்கெட் வீரராகவே ஆக்கிவிட மாட்டேன் என்று இதயம் நெருங்கும் வார்த்தைகளை ஜடேஜாவின் தந்தை பயன்படுத்தினார். தற்போது ஜடேஜாவும் அவருடைய மனைவியும் தனியாகத்தான் வசித்து வருகிறார்கள். தந்தை,தாய் ஆகியோர் கை கழுவி விட்ட நிலையில் மனைவியாவது மைதானத்திற்கு வந்து ஆதரவு கொடுப்பார் என ஜடேஜா எதிர்பார்த்தார். ஆனால் அவருடைய மனைவி அரசியலில் இருப்பதால் போட்டியை நேரில் வந்து காண வரவில்லை. இதனால் ஜடேஜா சொந்த மண்ணில் தன் குடும்பத்தினர் கூட வராத ஒரு நிலையில் தான் விளையாடினார்.

Story first published: Friday, February 16, 2024, 7:00 [IST]
Other articles published on Feb 16, 2024
English summary
Ind vs Eng - Sad state of Ravindra jadeja as no one from family didnt came to the staduim in home town சொந்த மண்ணில் ஜடேஜாவுக்கு நிகழ்ந்த சோகம்.. கை கழுவிய தந்தை.. மைதானத்திற்கு வராத மனைவி
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+