Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரோகித்தை விட கோலி உயர்ந்தவர்.. இருவரையும் ஒப்பிட வேண்டாம்.. சஞ்சய் மஞ்சுரேக்கர் கருத்து

மும்பை: சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் அடுத்தடுத்து ஓய்வு பெற்றதால், இந்திய அணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும், குறிப்பாக இங்கிலாந்து மண்ணில் இது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் பல கிரிக்கெட் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், டெஸ்ட் கிரிக்கெட் குறித்து பேசும்போது, விராட் கோலியுடன் ரோஹித் சர்மாவை ஒப்பிட வேண்டாம் என்றும், கோலி ஒரு தனித்துவமான மட்டத்தில் இருப்பதாகவும் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சுரேக்கர் கூறிய கருத்து சர்ச்சையை கிளப்பியுள்ளது. ரோஹித் சர்மாவை பொறுத்தவரை கோலியை விட முன்பே சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாக வேண்டியது.

Virat kohli and Rohit sharma

ஆனால் டாஸ்க்கு முன்பு அவருக்கு காயம் ஏற்பட்டதால், அவருக்கு அந்த வாய்ப்பு பறிப்போனது. இதனால் கோலியை விட மிகவும் தாமதமாக தான் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு ரோகித் வந்தார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சைக்கிளில் ரோகித் தான் இந்தியாவுக்காக அதிக ரன்கள் எடுத்துள்ளார்.

67 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ரோகித், 4,301 ரன்கள் எடுத்துள்ளார், இதில் 12 சதங்கள் அடங்கும்.
விராட் கோலி, 123 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 9,230 ரன்கள் குவித்துள்ளார், இதில் 30 சதங்கள் உள்ளன. இது குறித்து பேசிய மஞ்சுரேக்கர், "புதிய இந்திய டெஸ்ட் கேப்டனாக நியமிக்கப்பட்ட ஷுப்மன் கில், சமீபத்தில் ரோஹித் சர்மாவும் விராட் கோலியும் இல்லாதது அணியில் பெரிய வெற்றிடத்தை உருவாக்கியுள்ளதாக கூறினார்.

ஆனால், இந்த கருத்து எனக்கு சரியாக தோன்றவில்லை. இதில் எனக்கு முரண்பாடு உள்ளது. விராட் கோலியை பற்றி பேசும்போது, ரோஹித் சர்மாவையும் இணைத்து பேசுவது பொதுவாக உள்ளது. ரசிகர்கள் இவர்களை 'Roko' என்று கூட அழைக்கின்றனர்."

"ஆனால், இந்த ஒப்பீடு வெள்ளைப் பந்து கிரிக்கெட்டுக்கு மட்டுமே பொருந்தும். ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் இருவரும் ஒப்பிடத்தக்க சாதனைகளை புரிந்துள்ளனர். ஆனால், டெஸ்ட் கிரிக்கெட் என்று வரும்போது, விராட் கோலி, ரோஹித் சர்மாவை விட பல மடங்கு உயர்ந்தவர். எனவே, இருவரையும் ஒரே தட்டில் வைத்து மதிப்பிட முடியாது."

"இருவரின் டெஸ்ட் ரன்களை பார்த்தாலே இந்த உண்மை தெளிவாகும். தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி 12 சதங்கள் அடித்துள்ளார். ஆனால், ரோஹித் சர்மா இங்கிலாந்துக்கு எதிராக ஒரே ஒரு சதம் மட்டுமே எடுத்துள்ளார். 100 இன்னிங்ஸ்களுக்கு மேல் விளையாடியும், இந்த நாடுகளில் அவரது சராசரி 40 என்ற அளவில் உள்ளது.

இங்கிலாந்தில் முன்பே ரோகித் விளையாடி இருந்தால், அவரது சராசரி 30-க்கும் கீழே இருந்திருக்கும். எனவே, டெஸ்ட் கிரிக்கெட் பற்றி பேசும்போது, விராட் கோலியுடன் ரோஹித்தை ஒப்பிடுவதை நிறுத்த வேண்டும்," என்று சஞ்சய் மஞ்சுரேக்கர் வலியுறுத்தினார்.

Story first published: Monday, June 9, 2025, 17:32 [IST]
Other articles published on Jun 9, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+