Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆதில் ரஷித்தை பார்த்தாவது திருந்த வேண்டும்.. இந்திய ஸ்பின்னருக்கு மஞ்சுரேக்கர் அட்வைஸ்

மும்பை : இந்திய கிரிக்கெட் அணியில் ஒரு காலத்தில் தவிர்க்க முடியாத சுழற் பந்துவீச்சாளர் என்ற இடத்தில் குல்தீப் யாதவ் இருந்தார். தோனி விக்கெட் கீப்பராக இருந்தவரை குல்தீப், சர்வதேச கிரிக்கெட்டில் பல உச்சம் தொட்டார். தோனியின் அறிவுரைகளை ஏற்று குல்தீப் யாதவ், பந்து வீசி விக்கெட்டுகளை எடுத்தார்.

ஆனால் தோனி ஓய்வு பெற்ற பின்பு குல்தீப் செயல்பாடும் சரிந்தது. எனினும் அவ்வப்போது ஏதேனும் போட்டிகளில் ஜொலித்தாலும் குல்தீப் யாதவால் தொடர்ந்து இந்திய அணியில் இடம் பிடிக்க முடியவில்லை. இதற்கு அவருடைய உடல் தகுதியும் ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது. திறமை வாய்ந்த நட்சத்திர வீரராக அறியப்பட்டாலும் அதற்கான செயல்பாட்டை அவர் களத்தில் காண்பிப்பதில்லை.

ind vs eng rohit sharma virat kohli rishabh pant

குல்தீப், கடந்த போட்டியில் எட்டு ஓவர்கள் வீசி ஒரு விக்கெட் கைப்பற்றி 38 ரன்கள் விட்டு கொடுத்தார். இந்த சூழலில் சஞ்சய் மஞ்சூரியர் பல அறிவுரை வழங்கி இருக்கிறார். இதில் பேசிய அவர், குல்திப் யாதவ் பந்து வீசும் வேகம் எனக்கு கவலையை தருகிறது. இதனை சமாளிக்க அவர் பல மாற்றங்களை செய்து இருக்கிறார்.

முதலில் அதற்கு அவர் முழு உடல் தகுதியுடன் இருக்க வேண்டும். தற்போது பந்தை வேகமாக அவர் வீசுகிறார். ஆனால் அந்த பந்து எந்த ஒரு மேஜிக்கையும் செய்யவில்லை. அவருடைய பலமே பந்தை திருப்புவதில்தான் இருக்கின்றது. நீங்கள் வேகமாக பந்து வீசும் போது பந்து பெரிய அளவில் திரும்பாது. எனவே ஆடுகளத்தை நம்பி நீங்கள் இருக்க வேண்டிய சூழலுக்கு மாற்ற படுவீர்கள்.

அதேசமயம் ஆதில் ரசீதை பாருங்கள்.அவர் இந்தியாவுக்கு எதிராக எவ்வளவு சிறப்பாக பந்து வீசி இருக்கிறார்.இந்திய அணியின் டாப் வீரர்களின் விக்கெட்டை அவர் வீழ்த்தி இருக்கிறார்.அவருடைய வேகத்தை பாருங்கள். குல்தீப் தொடர்ந்து 80 கிலோமீட்டர் வேகத்தில் பந்து வீசுகிறார்.ஆனால் ஆதில் ரசித் அப்படி செயல்படுவதில்லை என்று சஞ்சய் மஞ்சுரேக்கர் தெரிவித்துள்ளார்.

Story first published: Thursday, February 13, 2025, 13:17 [IST]
Other articles published on Feb 13, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+