For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சர்பிராஸ் கானின் அசுர வளர்ச்சி.. இந்திய ஒருநாள் அணியிலும் வாய்ப்பு.. இந்த வீரருக்கு ஆபத்து தான்

மும்பை : இந்திய கிரிக்கெட் அணியில் தற்போது புயலாக வந்திருக்கும் அறிமுக டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் 62 ரன்களும் இரண்டாவது இன்னிங்ஸில் 68 ரன்களும் அடித்து அசத்தி இருக்கிறார்.

சப்ராஸ்கானின் இந்த அதிரடி ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளாக இந்திய அணியில் வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருந்த நிலையில் சர்பிராஸ் கான் தமக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் என்று பலரும் பாராட்டியுள்ளனர்.

sarfaraz khan

இந்த நிலையில் சர்பிராஸ் கான் தன்னுடைய டெஸ்ட் இன்னிங்ஸில் தமக்கு எல்லா விதமான ஷாட்டுகளும் ஆட தெரியும் என்பதை நிரூபித்து காட்டி இருக்கிறார். மேலும் கிரிக்கெட் யுத்தியில் கை தேர்ந்தவர். கிரிக்கெட் டெக்னிக்கில் எந்த குறையும் இதுவரை அவர் வெளிக்காட்டவில்லை என்ற பெயரும் பெற்றிருக்கிறார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் கவாஸ்கர் சர்பிராஸ் கான் அபாரமாக விளையாடுகிறார்.

அவர் ஏன் இவ்வளவு நாள் இந்திய அணியில் விளையாடவில்லை என்று எனக்கு தெரியவில்லை. அவருடைய ஆட்டத்தை பார்க்கும் போது டெஸ்ட் கிரிக்கெட் மட்டுமல்ல வெள்ளை நிற கிரிக்கெட்டிலும் சர்பிராஸ் கான் பட்டையை கிளப்புவார் என்று தோன்றுகிறது. அவர் விரைவில் ஒருநாள் அணியினரும் இடம் பிடிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதே போன்ற கருத்தை தினேஷ் கார்த்திக், அனில் கும்பலை போன்ற முன்னாள் வீரர்களும் வலியுறுத்தியுள்ளனர். இதனால் சர்பிராஸ்க்கு ஒரு நாள் இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சர்பிராஸ்கான் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாக அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.இந்திய அணியில் வரும் ஜூலை மாதம் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு மூன்று ஒரு நாள் போட்டி கொண்ட தொடரில் விளையாடுகிறது.

இதில் சர்பிராஸ் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. சர்பிராஸ்க்கு நடுவரிசையில் விளையாட தான் இடம் தரப்பட வேண்டும். இதனால் ஏற்கனவே நடு வரிசையில் இருக்கும் ஸ்ரேயாஸுக்கு சர்பிராஸ்கான் வில்லனாக வந்திருக்கிறார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.ஆனால் ஸ்ரேயாஸ் ஒருநாள் கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடி வருவதால் அவருடைய இடத்திற்கு தற்போது ஆபத்து இல்லை. ஆனால் ஸ்ரேயாஸ் ஐயர் தன்னுடைய உடல் தகுதியை கவனம் செலுத்தவில்லை என்றால் சர்பிராஸ் கான் அந்த இடத்தில் விளையாட அதிக வாய்ப்பு இருக்கிறது.

ஆனால் ஸ்ரேயாஸ் ஒருநாள் கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடி வருவதால் அவருடைய இடத்திற்கு தற்போது ஆபத்து இல்லை. ஆனால் ஸ்ரேயாஸ் ஐயர் தன்னுடைய உடல் தகுதியை கவனம் செலுத்தவில்லை என்றால் சர்பிராஸ் கான் அந்த இடத்தில் விளையாட அதிக வாய்ப்பு இருக்கிறது.

Story first published: Monday, February 19, 2024, 15:30 [IST]
Other articles published on Feb 19, 2024
English summary
Ind vs Eng - Sarfaraz khan is all set to made debut in odi cricket சர்பிராஸ் கானின் அசுர வளர்ச்சி.. இந்திய ஒருநாள் அணியிலும் வாய்ப்பு.. இந்த வீரருக்கு அபத்து தான்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+