For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஸ்ரேயாஸ் நீங்க உட்காருங்க.. அக்சர் நீங்க போங்க.. ரோகித் எடுத்த முடிவின் பின்னணி என்ன?

ஐதராபாத் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தடுமாறி வருகிறது. முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 246 ரன்கள் எடுத்த நிலையில் இந்திய அணி 436 ரன்கள் குவித்துள்ளது.

190 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் களம் இறங்கியது. இங்கிலாந்து அணி ஆலி போல் பின் அபார ஆட்டத்தால் 420 ரன்கள் குவித்தது. இதனை அடுத்து 231 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சற்று சவாலான இலக்குடன் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் களம் இறங்கியது.

IND VS ENG - Shreyas iyer depromotion Reason behind batting order change

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரோகித் சர்மா இரண்டாவது இன்னிங்ஸில் 39 ரன்களில் ஆட்டம் இழந்தார். ஜெய்ஸ்வால் 15 ரன்களில் வெளியேற கில் டக் அவுட் ஆனார். இதனை எடுத்து கேஎல் ராகுல் களத்தில் இருந்தபோது கேப்டன் ரோகித் சர்மா ஒரு முடிவு எடுத்தார். அதன்படி பேட்டிங் வரிசையில் ஸ்ரேயாஸ் ஐயரை பின்னுக்கு தள்ளி விட்டு அக்சர் பட்டேலை நம்பர் ஐந்தாவது இடத்தில் களம் இறக்கினார்.

இது ரசிகர்களிடையே பல சலசலப்பை ஏற்படுத்தியது. ஸ்ரேயாஸ் பேட்டிங் ஃபார்மில் இல்லாத நிலையில் அவரை பேட்டிங் வரிசையில் பின்னுக்கு தள்ளுவதற்கு பதில் ஏன் அணியில் முதலில் தேர்வு செய்தீர்கள் என்று கேள்வி கேட்டு வருகின்றனர். ஸ்ரேயாஸ் ஐயர் மீது நம்பிக்கை இல்லை என்றால் அவர் பிளேயிங் லெவனில் இருக்கவே தேவையில்லை என்றும் பலரும் கேள்வி கேட்டு வருகின்றனர்.

ஆனால் ரோகித் சர்மா எடுத்த இந்த முடிவுக்கு பின்னணியில் வேறு காரணம் இருப்பதாக கிரிக்கெட் வல்லுநர்கள் கூறுகின்றனர். அதன்படி இங்கிலாந்து பந்துவீச்சாளர்களின் லைனை குழப்ப வலது கை, இடது கை பேட்ஸ்மேன்கள் களத்தில் இருக்கும் படி பேட்டிங் வரிசையை ரோகித் சர்மா மாற்றி இருக்கிறார் என்று கருத்து தெரிவித்துள்ளார்கள்.

எனினும் அக்சர் பட்டேல் நம்பர் ஐந்தாவது இடத்தில் களமிறங்கி 17 ரன்களில் ஆட்டம் இழந்து இருக்கிறார். இதனால் அக்சர் பட்டேல் தன்னுடைய இடத்தில் விளையாடி இருந்தாலாவது குறைந்தபட்சம் ஒரு அரை சதமாவது அடித்திருப்பார் என்றும் தேவையில்லாமல் பேட்டிங் வரிசையை மாற்றி ரோகித் சர்மா குழப்பம் செய்து விட்டார் என்றும் ரசிகர்கள் சாடி வருகிறார்கள். அடுத்த டெஸ்ட் போட்டியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் ரசிகர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Story first published: Sunday, January 28, 2024, 15:27 [IST]
Other articles published on Jan 28, 2024
English summary
IND VS ENG - Shreyas iyer depromotion Reason behind batting order change ஸ்ரேயாஸ் நீங்க உட்காருங்க.. அக்சர் நீங்க போங்க.. ரோகித் எடுத்த முடிவின் பின்னணி என்ன?
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+