For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஸ்ரேயாஸ் ஐயருக்கு ஆப்பு.. விராட், ராகுல், ஜடேஜா நிலை என்ன? 3 டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு

மும்பை : இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி 3 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் 2 டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் 1-1 என்ற நிலையில் சமநிலையில் உள்ளன. இந்த நிலையில் 3வது டெஸ்ட் போட்டி ராஜ்கோட் மைதானத்தில் பிப்.15ஆம் தேதி தொடங்கவுள்ளது.

IND vs ENG : Team India Squad announced for the remaining 3 test against England and Virat Kohli is unavailable

இதற்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. இதில் நட்சத்திர வீரர் விராட் கோலி சொந்த காரணங்களால் விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே முதல் இரு போட்டிகளில் விராட் கோலி விலகிய நிலையில், தற்போது மொத்தமாக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இருந்தும் விலகியுள்ளார். இதுகுறித்து விராட் கோலி ஏற்கனவே பிசிசிஐ-க்கு தகவல் கூறியுள்ளார். இதனால் விராட் கோலியின் முடிவுக்கு பிசிசிஐ முழு ஆதரவை அளிப்பதாக கூறியுள்ளது.

அதேபோல் முதல் டெஸ்டில் காயமடைந்து விலகிய இந்திய அணியின் சீனியர் வீரர்களான கேஎல் ராகுல் மற்றும் ஜடேஜா இருவரும் ஃபிட்னஸை பொறுத்து களமிறங்குவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் முதல் இரு போட்டிகளில் விளையாடிய ஸ்ரேயாஸ் ஐயர் இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக இந்திய ஏ அணியில் சிறப்பாக ஆடி வரும் ஆகாஷ் தீப் சேர்க்கப்பட்டுள்ளார்.

அதேபோல் இளம் வீரர்களான சர்பராஸ் கான், ரஜத் பட்டிதர், துருவ் ஜுரெல், கேஎஸ் பரத் உள்ளிட்டோருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ரஞ்சி டிராபி போட்டிகளில் சிறப்பாக விளையாடி வந்த புஜாராவுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. மேலும் 2வது போட்டியில் விலகிய சிராஜ் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார்.

இந்திய அணி விவரம் : ரோகித் சர்மா, பும்ரா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரவிச்சந்திரன் அஸ்வின், சுப்மன் கில், சிராஜ் , முகேஷ் குமார், குல்தீப் யாதவ், அக்சர் படேல், கேஎல் ராகுல், ஜடேஜா, துருவ் ஜுரெல், கேஎஸ் பரத், சர்பராஸ் கான், ரஜத் பட்டிதர், ஆகாஷ் தீப், வாஷிங்டன் சுந்தர்.

Story first published: Saturday, February 10, 2024, 11:04 [IST]
Other articles published on Feb 10, 2024
English summary
IND vs ENG : Team India Squad announced for the remaining 3 test against England and Virat Kohli is unavailable
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+