Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சர்பிராஸ் கானை விடுங்க.. முதல் டெஸ்ட் விளையாடுவதற்கு முன் அதிக சராசரி வைத்திருந்த இந்திய வீரர்கள்

Sarfaraz Khan :இந்திய கிரிக்கெட் அணியில் சில வீரர்கள் மட்டும்தான் ஒரு டெஸ்ட் அல்லது ஒரு நாள், டி20 போட்டியில் விளையாடுவதற்கு முன்பே பிரபலமாகி ரசிகர்கள் மத்தியில் பெயர் வாங்கி இருக்கிறார்கள். இதற்கு ஐபிஎல் மிகவும் முக்கிய காரணமாக கருதப்பட்டாலும் ஐபிஎல் க்கு முன்பே பல வீரர்கள் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருந்திருக்கிறார்கள்.

அதற்கு காரணம் ரஞ்சி கிரிக்கெட்டில் பல வீரர்கள் பல ரெக்கார்டுகளை படைத்து வாய்ப்புக்காக காத்திருந்திருக்கிறார்கள். இந்த நிலையில் சர்பிராஸ் காணும் ஐபிஎல் தொடரில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாத நிலையில் ரஞ்சி கிரிக்கெட்டில் விளையாடி அதிக சராசரியை வைத்து இருந்தார்.

Ind vs Eng test - List of Highest First class average by an Indian batsman at the time of Test debut

தற்போது பல ஆண்டு காத்திருப்புக்கு பிறகு முதல் முறையாக இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பை அவர் பெற்றிருக்கிறார். சர்வதேச கிரிக்கெட் வரலாற்றிலே டான் பிராட்மேனுக்கு தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் 99 என்ற அளவில் சராசரியை வைத்திருந்தார். அவருக்கு பிறகு சர்பிராஸ்கான் தான் அதிக சராசரி வைத்திருந்த வீரர் என்ற பெருமையை பெற்றிருந்தார்.

எனினும் சர்பிராஸ் கானின் சராசரி கடந்த சில போட்டிகளில் குறைந்து தற்போது 88 லிருந்து 69.85 என்ற அளவில் ஆனது. இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணிக்காக முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்கு முன்பு உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் அதிக சராசரி வைத்திருந்த வீரர்கள் யார் என்பதை தற்போது பார்க்கலாம். இந்த பட்டியலில் முதலிடத்தை பிடித்திருப்பவர் வினோத் காம்ப்ளி. இந்திய அணிக்காக விளையாடுவதற்கு முன்பு 88.37 என்ற அளவில் உள்நாட்டு கிரிக்கெட் போட்டியில் சராசரி வைத்திருந்தார்.

வினோத் காம்ப்ளே, டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் ஏழு போட்டிகளிலேயே இரண்டு இரட்டை சதம் இரண்டு சதம் என அடித்து பட்டையை கிளப்பினார். இந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்திருப்பவர் பிரவீன் ஆம்ரே, இவர் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்கு முன்பு 81.23 என்ற அளவில் சராசரியை வைத்திருந்தார். இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்திருப்பவர் ருசி மோடி. இவர் முதல் டெஸ்ட் போட்டி விளையாடுவதற்கு முன்பு 71.28 அளவில் சராசரி வைத்திருந்தார்.

இந்த பட்டியலில் நான்காவது இடத்தை பிடித்திருப்பவர் சச்சின் டெண்டுல்கர். சச்சின் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்கு முன்பு உள்நாட்டு கிரிக்கெட் போட்டியில் 70.18 என்ற அளவில் சராசரி வைத்திருந்தார். இந்த பட்டியலில் தற்போது ஐந்தாவது இடத்தில் சர்பிராஸ்கான் 69.85 என்ற அளவில் சராசரி வைத்திருக்கிறார். எனினும் அவர் இன்னும் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை. இந்த பட்டியலில் ஆறாவது இடத்தில் தற்போது சுப்மன் கில் இருக்கிறார். இவர் 68.78 என்ற அளவில் சராசரி வைத்திருந்த நிலையில் தனது முதல் டெஸ்ட் போட்டியை இந்திய அணிக்காக விளையாடினார்.

Story first published: Thursday, February 1, 2024, 14:56 [IST]
Other articles published on Feb 1, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+