Rohit sharma catch : இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா பிடித்த ஒரு கேட்ச் ஆட்டத்தின் போக்கையை தலைகீழாக மாற்றி விட்டது. முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்ற நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்தின் தோல்வியை தவிர்க்க போராடி வருகிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதல் இன்னிங்ஸில் ஜெய்ஸ்வாலின் அபார இரட்டை சதத்தால் 396 ரன்கள் குவித்தது. இதனை அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 253 ரன்கள் ஆட்டம் இழந்தது.

பும்ரா அபாரமாக பந்து வீசி ஆறு விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதை அடுத்து 143 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடியது. இதில் 143 ரன்கள் முன்னிலை பெற்று அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதன் மூலம் இந்திய அணி 255 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 399 எடுத்தால் வெற்றி என்று இலக்குடன் இங்கிலாந்து அணி கடைசி இன்னிங்சில் விளையாடியது.
இங்கிலாந்தின் பேஸ்பால் என்ற அபார ஆட்டத்தை வெளிப்படுத்துவதால் இந்த இலக்கு போதுமா என ரசிகர்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டது. இந்த நிலையில் இங்கிலாந்து அணி 132 ரன்கள் இரண்டு விக்கெட்டுகளை இழந்து விளையாடி வந்தது. அப்போது ஆலிபோப் களத்தில் 23 ரன்கள் எடுத்திருந்தார். ஆலி போப்பின் விக்கெட்டை வீழ்த்த வேண்டிய நெருக்கடியில் இந்திய அணி இருந்தது. ஏனென்றால் அவர்தான் முதல் டெஸ்டில் அபாரமாக விளையாடி இந்தியாவின் தோல்விக்கு காரணமாக இருந்தார்.
அப்போதுதான் ரோகித் சர்மாவின் ஒரு அபாரமான கேட்ச் ஆட்டத்தின் போக்கையே மாற்றியது. அஸ்வின் வீசிய பந்தை ஆலி போப் அடித்து ஆட முற்பட்டார். அப்போது பந்து ஸ்லிப்பை நோக்கி பறந்தது. அப்போது ஸ்லீப்பில் நின்று கொண்டிருந்த ரோகித் சர்மா அபாரமாக பாய்ந்து அந்த கேட்சை பிடித்தார். இதன் மூலம் இந்திய வீரர்கள் இந்த விக்கெட்டை கொண்டாடினார்.
ரோகித் சர்மா இந்த கேட்சை பிடிக்க 0.45 நொடிகளை எடுத்துக் கொண்டார். இதன் மூலம் இங்கிலாந்து அணியின் சரிவு தொடங்கியது. அடுத்தடுத்து இங்கிலாந்து வீரர்களின் விக்கெட்டை இந்தியா எடுக்க ஆரம்பிக்க 6 விக்கெட்டுகளை தற்போது அந்த அணி இழந்துவிட்டது. இன்னும் நான்கு விக்கெட்டுகளே எஞ்சியுள்ள நிலையில் வெற்றிக்கு அருகில் இந்திய அணி இருக்கிறது.