Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs ENG: விராட் கோலி, ரோகித் சர்மா பார்ட்னர்ஷிப்பில் சாதனை.. இது தான் கடைசி முறையா?

கார்டிஃப்: இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஜோடி, சர்வதேச கிரிக்கெட்டில் புதிய சாதனையைப் படைத்துள்ளது. கார்டிஃப்பில் இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்த ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 60 ரன்கள் சேர்த்தது.

இதன் மூலம், அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் அதிக ரன்கள் குவித்த இந்திய ஜோடிகளின் பட்டியலில் ராகுல் டிராவிட் - சவுரவ் கங்குலி இணையை முந்தி ரோஹித்-கோலி ஜோடி 3-வது இடத்தைப் பிடித்து சாதனைப் படைத்துள்ளது. இப்போட்டியில் கேப்டன் சுப்மன் கில் ஆட்டமிழந்த பிறகு, விராட் கோலி மைதானத்தில் ரோஹித்துடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் இணைந்து 60 ரன்கள் சேர்த்த நிலையில் ரோஹித் சர்மா ஆட்டமிழந்தார்.

Ind vs Eng

ரோகித் பேட்டிங்கில் தடுமாறி வருவதால், அவர் அடுத்த போட்டியிலேயே சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுவிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்த ஜோடி இணைந்து விளையாடுவது இதுவே கடைசியாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

பட்டப்பகலில் ஏமாற்றும் இங்கிலாந்து அணி, நடுவர்கள்.. இந்திய அணிக்கு பவுண்டரி போச்சு

பட்டப்பகலில் ஏமாற்றும் இங்கிலாந்து அணி, நடுவர்கள்.. இந்திய அணிக்கு பவுண்டரி போச்சு

ரோஹித் மற்றும் கோலி ஜோடி அனைத்து வகையான சர்வதேச போட்டிகளிலும் சேர்த்து இதுவரை தங்களது பார்ட்னர்ஷிப்பில் 8,028 ரன்கள் குவித்துள்ளது. இவர்களின் முதல் பார்ட்னர்ஷிப் பிப்ரவரி 2010-ல் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அமைந்தது. அப்போது 366 ரன்கள் என்ற கடினமான இலக்கை விரட்டும்போது, இந்த ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 95 ரன்கள் சேர்த்தது குறிப்பிடத்தக்கது.

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் ரோஹித் மற்றும் கோலி ஜோடி 103 போட்டிகளில் 58.54 என்ற சராசரியுடன் 5,679 ரன்கள் குவித்துள்ளது. ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அதிக ரன்கள் சேர்த்த ஜோடிகளில் கங்குலி மற்றும் டெண்டுல்கர் ஜோடிக்கு அடுத்தபடியாக இவர்கள் இரண்டாவது இடத்தில் நீடிக்கின்றனர்.

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த இந்திய பார்ட்னர்ஷிப் ஜோடிகளில் சவுரவ் கங்குலி மற்றும் சச்சின் டெண்டுல்கர் இணை முதலிடத்தில் உள்ளது. இந்த ஜோடி 176 இன்னிங்ஸ்களில் 8227 ரன்கள் எடுத்துள்ளது.

இதனைத் தொடர்ந்து விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஜோடி 103 இன்னிங்ஸ்களில் 5679 ரன்கள் குவித்து இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்த பட்டியலில் ஷிகர் தவன் மற்றும் ரோஹித் சர்மா இணை 117 இன்னிங்ஸ்களில் 5193 ரன்களுடன் மூன்றாவது இடத்தில் நீடிக்கிறது.

மேலும் வீரேந்தர் சேவாக் மற்றும் சச்சின் டெண்டுல்கர் ஜோடி 114 இன்னிங்ஸ்களில் 4387 ரன்களுடன் நான்காவது இடத்திலும், ராகுல் டிராவிட் மற்றும் சவுரவ் கங்குலி ஜோடி 87 இன்னிங்ஸ்களில் 4332 ரன்களுடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளன.

IND vs ENG: முதல் பந்திலேயே விக்கெட்.. கதி கலங்கிய இங்கிலாந்து.. பும்ரா அபாரம்

IND vs ENG: முதல் பந்திலேயே விக்கெட்.. கதி கலங்கிய இங்கிலாந்து.. பும்ரா அபாரம்

டி20 சர்வதேச போட்டிகளில் ரோஹித் மற்றும் கோலி ஜோடி 42 இன்னிங்ஸ்களில் 3 சதங்களுடன் 32.14 சராசரியில் 1,350 ரன்கள் எடுத்துள்ளது. டி20 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த இந்திய ஜோடிகளின் பட்டியலில் கே.எல்.ராகுல்-ரோஹித் மற்றும் ஷிகர் தவன்-ரோஹித் ஜோடிகளுக்கு அடுத்தபடியாக இந்த இணை மூன்றாவது இடத்தில் உள்ளது.

Story first published: Thursday, July 16, 2026, 23:17 [IST]
Other articles published on Jul 16, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+