Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தள்ளுங்க.. அவசர அவசரமாக ஓடிச் சென்று கட்டி அணைத்த விராட் கோலி.. வியந்து பார்த்த ரசிகர்கள்

புவனேஸ்வர்: இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டி அகமதாபாத்தில் நடைபெற உள்ளது. அந்த போட்டியில் பங்கேற்பதற்காக இந்திய அணி நேற்று அகமதாபாத்திற்கு சென்றது. இரண்டாவது போட்டி நடந்த ஒடிசாவின் கட்டாக் நகரில் இருந்து புவனேஸ்வருக்கு சென்ற இந்திய வீரர்கள் அங்கிருந்து அகமதாபாத்திற்கு சென்றனர்.

அப்போது புவனேஸ்வர் விமான நிலையத்தில் விராட் கோலி ஒரு பெண்மணியைப் பார்த்தவுடன் உற்சாகமடைந்தார். அந்த பெண் விராட் கோலியை பார்ப்பதற்காக நீண்ட நேரம் காத்திருந்தார் கோலியை பார்த்து கை காட்டினார். அவரைப் பார்த்த கோலி உடனே அவரைச் சென்று கட்டி அணைத்து அவருடன் சில வார்த்தைகள் பேசினார்.

IND vs ENG India Virat Kohli

இது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வலம் வருகிறது. விராட் கோலி அந்தப் பெண்மணியை அடையாளம் கண்டு ஓடிச் சென்று பேசியதால் யார் அந்தப் பெண்மணி? என விராட் கோலி ரசிகர்கள் வியந்து வருகின்றனர். அது அவரது நெருங்கிய உறவினர் என ஒரு ரசிகர் குறிப்பிட்டு இருக்கிறார்.

விராட் கோலி மூன்றாவது ஒருநாள் போட்டியில் அபாரமாக விளையாடி சதம் அடித்து தனது ஃபார்மை மீட்டெடுப்பாரா என அவரது ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். விராட் கோலி இந்திய அணி விளையாடிய டெஸ்ட் போட்டிகளில் சரியாக ரன் குவிக்கவில்லை. நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடர்களில் அவர் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

ODI வரலாற்றிலேயே அதிவேக மைல்கல் சாதனை.. 9 ஆண்டு விராட் கோலி ரெக்கார்டை உடைத்த கேன் வில்லியம்சன்

ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் ஒரு சதம் அடித்த போதும், அடுத்து ஆடிய போட்டிகளில் அவரால் ரன் குவிக்க முடியவில்லை. அதனால் உள்ளூர் ரஞ்சி டிராபி போட்டி ஒன்றில் விளையாடினார். அதிலும் ஐந்து ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.

அடுத்து இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் விளையாடிய அவர், இந்தப் போட்டியில் ஐந்து ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்து இருந்தார். அடுத்து சாம்பியன் டிராபி தொடரில் விளையாட உள்ள நிலையில், அதற்கு முன் விராட் கோலி தனது ஃபார்மை மீட்டெடுப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் மூன்றாவது ஒருநாள் போட்டி பிப்ரவரி 12 அன்று அகமதாபாத்தில் நடைபெற உள்ளது.

Story first published: Tuesday, February 11, 2025, 13:04 [IST]
Other articles published on Feb 11, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+