லண்ட்ன்: இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 2க்கு2 என்ற கணக்கில் தொடரை சமன் செய்துள்ளது. குறிப்பாக கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த சூழலில் முஹமது சிராஜ், கில் ஜடேஜா, ராகுல் உள்ளிட்ட பல்வேறு வீரர்கள் இந்த தொடரில் சிறப்பாக செயல்பட்டாலும், தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் தான் முக்கிய கட்டத்தில் அணியை காப்பாற்றினார். நான்காவது டெஸ்ட் போட்டியில் சதம் விளாசிய வாஷிங்டன் சுந்தர், கடைசி டெஸ்ட் போட்டியில் அதிரடியாக விளையாடி அரை சதம் அடித்தார்.

இன்னும் சொல்லப்போனால் வாஷிங்டன் சுந்தர் அடித்த அந்த ரன்கள் தான் இந்திய அணி வெற்றிக்கு மிகவும் முக்கிய காரணமாக அமைந்தது. இந்த நிலையில் வெற்றி கொண்டாட்டத்திற்கு பிறகு டிரெஸ்ஸிங் ரூமில் இந்திய அணி வீரர்களுடன் கௌதம் கம்பீர் உரையாடினார்.
வீரர்களிடம் கம்பீர் அறிவுரை:
அப்போது இந்த தொடரை இரண்டுக்கு இரண்டு என்ற கணக்கில் நாம் சமம் செய்திருக்கின்றோம். உண்மையிலேயே இது பிரமாண்டமான முடிவு தான். வீரர்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். நாம் தொடர்ந்து முன்னேற வேண்டும். தொடர்ந்து களத்தில் உழைக்க வேண்டும்.
எல்லா துறையிலும் நாம் முன்னேற்றம் அடைய வேண்டும். அதை நாம் தொடர்ந்து செய்தோம் என்றால் நிச்சயமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் பல ஆண்டுகளுக்கு நம்மால் ஆதிக்கம் செலுத்த முடியும். வீரர்கள் வருவார்கள், போவார்கள். ஆனால் ட்ரெஸ்ஸிங் ரூமில் இருக்கும் இந்த கலாச்சாரம் அப்படியே இருக்க வேண்டும்.
வாசிங்டன் சுந்தருக்கு விருது:
இந்த ட்ரெஸ்ஸிங் ரூம் கலாச்சாரத்தில் பங்கு பெற வீர வீரர்கள் விரும்ப வேண்டும். இதை தான் நாங்கள் உருவாக்க முயற்சி செய்கின்றோம். நன்றாக ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள் என்று கம்பீர் கூறினார். இதனை தொடர்ந்து பேசிய ஜடேஜா, இந்த தொடரில் தாக்கத்தை ஏற்படுத்திய வீரருக்கான விருதை வாஷிங்டன் சுந்தருக்கு வழங்க விரும்புவதாக கூறி அவரை அழைத்து இந்த விருதை வழங்கினார்.
அதன் பின் பேசிய வாஷிங்டன் சுந்தர், இங்கிலாந்து போன்ற மண்ணில் தொடர்ந்து நான்கு டெஸ்ட் விளையாடியதை நான் பெருமையாக கருதுகின்றேன். களத்தில் நாம் ஒருவருக்கு ஒருவர் உறுதுணையாக இருந்தோம். களத்தில் நாம் உத்வேகமாக செயல்பட்டோம். எனக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன் என்று வாசிங்டன் சுந்தர் கூறினார்.