Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs ENG: இந்த பையன் கிட்ட ஏதோ இருக்குங்க.. ஆனால் ரொம்ப சந்தோசப்பட கூடாது.. வசீம் அக்ரம் கருத்து

மும்பை : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் அபிஷேக் ஷர்மா அபாரமாக செயல்பட்டார். கொல்கத்தாவில் நடைபெற்ற டி20 போட்டியில் 50 பந்துகளில் அரை சதம் அடித்த அபிஷேக் ஷர்மா 34 பந்துகளில் 79 ரன்கள் சேர்த்தார்.

அதேபோன்று ஜிம்பாப்வேக்கு எதிரான டி20 போட்டியில் 47 பந்துகளில் சதத்தை பூர்த்தி செய்தார். மேலும் அபிஷேக் ஷர்மா சுழற் பந்துவீச்சும் விக்கெட்டுகளை எடுத்தார்.இதன் காரணமாக அபிஷேக் ஷர்மா மீது நல்ல எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கிறது.

ind vs eng abhishek sharma wasim akram

இதுவரை இந்திய அணிக்காக 15 போட்டியில் விளையாடி 371 அடித்திருக்கிறார். இதில் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 182 என்ற அளவில் இருக்கின்றது. அபிஷேக்சர்மா குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் வசிம் அக்ரம், இந்த பையனிடம் ஏதோ சிறப்பான ஒரு விஷயம் இருக்கிறது. இவருக்கு இந்திய கிரிக்கெட் அணியில் நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது.

ஆனால் நாம் அபாரமாக விளையாடுகிறோம் என நினைத்து ரிலாக்ஸாக இருக்கக் கூடாது. நமது பேட்டிங் குறித்து நாம் மகிழ்ச்சியும் அடையக் கூடாது. இந்த நாளை சந்தோஷமாக கழித்துவிட்டு அடுத்ததை நோக்கி நகர்ந்து செல்ல வேண்டும். ஏனென்றால் இது மிக நீண்ட பயணம் ஆகும்.அபிஷேக் ஷர்மாவின் பேட்டிங் நன்றாக மெருகேறி இருக்கிறது.

இதற்கு பிரைன் லாரா ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம். இதேபோல் அபிஷேக் ஷர்மா, யுவராஜ் சிங் உடன் கடந்த இரண்டு ஆண்டுகளாக பணியாற்றி இருக்கிறார். எனவே இளம் வயதில் அபிஷேக் ஷர்மா நல்ல குருக்களை ரோல் மாடலாக எடுத்துக் கொண்டு வளர்ந்து இருக்கிறார். ஒருவர் கிரிக்கெட்டிலே மிகச்சிறந்த வீரரான பிரைன் லாரா, மற்றொருவர் அதிரடி மன்னன் யுவராஜ் சிங் என்று வசீம் அக்ரம் குறிப்பிட்டுள்ளார்.

இதை தொடர்ந்து பேசிய அவர், அபிஷேக் ஷர்மா சரியான பாதையில் செல்கிறார்.அனைவரின் கவரக்கூடியவராக இருக்கின்றார். ஆனால் வாழ்க்கையிலும் சரி, களத்திலும் சரி நமக்கு வழிகாட்டிகள் தேவை தற்போது அபிஷேக் ஷர்மாவுக்கு நல்ல வழிகாட்டிகள் இருக்கிறார்கள். இவருடைய பேட்டிங்கை பார்த்து லாராவும் யுவராஜ் சிங் நிச்சயமாக பெருமை கொள்வார்கள். அவர்களுடைய உழைப்பு தற்போது நல்ல பலனை கொடுத்து இருக்கிறது என்று வசிம் அக்ரம் கூறியுள்ளார்.

Story first published: Wednesday, January 29, 2025, 19:48 [IST]
Other articles published on Jan 29, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+