Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியா vs இங்கிலாந்து டெஸ்ட் போட்டி.. தொடங்கும் நேரம் என்ன? எந்த சேனல், ஓடிடியில் பார்க்கலாம்?

ஐதராபாத் : இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி தொடங்கும் நேரம், எந்த சேனல், ஓடிடியில் நேரலையாக பார்க்க முடியும் என்பது குறித்து பார்க்கலாம்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர். பேஸ்பால் அணுகுமுறையுடன் களமிறங்கும் இங்கிலாந்து அணி, சுழலுக்கு சாதகமாக இருக்கும் இந்திய மைதானங்களில் இந்திய அணி எதிர்த்து எப்படி விளையாடும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

IND vs ENG : When and Where to Watch the India vs England Test Series and lets see the timing and Live Streaming details

அந்த வகையில் நாளை ஐதராபாத் மண்ணில் முதல் டெஸ்ட் போட்டி தொடங்கவுள்ளது. அதனைத் தொடர்ந்து பிப்.2 தேதி முதல் பிப்.6 வரை விசாகப்பட்டினத்தில் 2வது டெஸ்ட் போட்டியும், பிப்.15 முதல் முதல் பிப்.19 வரை ராஜ்கோட் மைதானத்தில் 3வது டெஸ்ட் போட்டியும், பிப்.23 முதல் பிப்.27 வரை தோனியின் சொந்த ஊரான ராஞ்சி மண்ணில் 4வது டெஸ்ட் போட்டியும், மார்ச் 7 முதல் மார்ச் 11 வரை தரம்சாலாவில் கடைசி டெஸ்ட் போட்டியும் நடக்கவுள்ளது.

இந்த டெஸ்ட் போட்டிகளின் முதல் செஷன் காலை 9.30 மணி முதல் 11.30 மணி வரையிலும், 2வது செஷன் 12.10 முதல் 2.10 வரையிலும், 3வது செஷனில் 2.30 மணி முதல் 4.30 மணி வரை நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த போட்டிகள் அனைத்தும் ஸ்போர்ட்ஸ் 18 மற்றும் கலர்ஸ் சினிபிளக்ஸ் ஆகிய சேனல்களில் நேரலையில் காண முடியும். ஓடிடியை பொறுத்தவரை ஜியோ சினிமாஸ் செயலியில் இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடரை இலவசமாக பார்க்க முடியும்.

இந்த டெஸ்ட் தொடரை பொறுத்தவரை இந்திய அணியில் இருந்து முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதில் இருந்து விராட் கோலி சொந்த பிரச்சனைகள் காரணமாக விலகியுள்ளார். அதேபோல் இங்கிலாந்து அணியின் இளம் நட்சத்திர வீரர் ஹாரி ப்ரூக் சொந்த காரணங்களுக்காக விலகுவதாக அறிவித்து, சொந்த ஊர் திரும்பியுள்ளார். இரு அணிகளிலும் முக்கியமான வீரர்கள் கடைசி நேரத்தில் விலகி இருப்பதால், ரசிகர்களிடையே கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Story first published: Wednesday, January 24, 2024, 11:36 [IST]
Other articles published on Jan 24, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+