Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கம்பீர் செய்வது முட்டாள்தனம்.. நாங்க விளையாடும் காலத்தில் இந்த கூத்துல்லாம் கிடையாது..EX வீரர் சாடல்

மும்பை: இந்திய அணி வீரர்களுக்கு பணிச் சுமையை நிர்வகிக்கும் முடிவு என்பது முட்டாள்தனமான ஒன்று என்று முன்னாள் தேர்வு குழு தலைவரும் முன்னாள் இந்திய வீரருமான சந்தீப் பாட்டில் தெரிவித்துள்ளார். இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் விளையாடி இரண்டுக்கு இரண்டு என்ற கணக்கில் தொடரை சமன் செய்தது.

இந்த தொடர் தொடங்குவதற்கு முன்பே பும்ரா மூன்று டெஸ்ட் போட்டிகள் தான் விளையாடுவார் என்று கம்பீர அறிவித்தார். இதன் மூலம் பும்ராவின் பணிச்சுமையை பேணி பாதுகாக்க முடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

Ind vs Eng

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சந்திப் பாட்டில், இதற்கெல்லாம் பிசிசிஐ முதலில் எப்படி ஒப்புக்கொண்டது என்று எனக்கு தெரியவில்லை. கேப்டனை விட அணியின் பிசியோ மிகவும் முக்கியமான நபரா? அணியில் யார் இருக்க வேண்டும் என்பதை பயிற்சியாளர் முடிவு செய்வதை விட பிசியோ தான் இப்போது முடிவு செய்கிறார்களா?

அப்போது தேர்வு குழுவினர் என்பது எதற்கு அதற்கு பேசாமல் தேர்வுக்குழுவுக்கு பதில் பிசியோ நிபுணர்களே வீரர்களை தேர்வு செய்ய சொல்லிவிடலாமே, வீரர்களின் பனிச்சுமை நிறைவேற்கிறோம் என்பது முட்டாள்தனமான ஒன்று. என்ன பணிச்சுமையை நீங்கள் நிர்வகிக்கிறீர்கள். ஒன்று,வீரர் உடல் தகுதியுடன் இருக்கிறார் இல்லை என்றால் அணியை விட்டு வெளியே அனுப்பி விட வேண்டும்.

அதை விட்டுவிட்டு குறிப்பிட்ட டெஸ்ட் போட்டிகளில் தான் விளையாடுவேன் என்று சொல்வதெல்லாம் முற்றிலும் மோசமான ஒரு விஷயம். இதையெல்லாம் பிசிசிஐ ஊக்குவிப்பது என்பது மிகப்பெரிய தவறு. தற்போது எல்லாம் பேட்ஸ்மேன்கள் விதவிதமான ஷாட்களை ஆடுகிறார்கள்.
நாங்கள் விளையாடும் போது ஏதேனும் ஒரு ஷாட் ஆட முயற்சி செய்தால் கவாஸ்கர் எங்களை திட்டுவார்.

ஆனால் தற்போது காணும் மாறிவிட்டது. பலரும் அதனை ஏற்றுக்கொள்கிறார்கள். ஆனால் என்னால் எது ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றால் வீரர்கள் எப்படி அணியில் இருக்கும் போது போட்டியை மிஸ் செய்கிறார்கள் என்பதுதான். மேலும் கடைசி டெஸ்டில் இந்தியா வெற்றி பெற்றதற்கு நான் வாழ்த்துக்களை கூறுகின்றேன். ஒரு பேட்ஸ்மேன் ஆக கேப்டன் கில் சிறப்பாகவே செயல்பட்டு இருக்கிறார். முஹமது சிராஜ் ஒரு போர்வீரர் போல் களத்தில் செயல்பட்டார். அவரை பார்த்து மற்ற வீரர்கள் பின்பற்ற வேண்டும் என்று சந்திப் பாட்டில் கூறியுள்ளார்.

Story first published: Friday, August 8, 2025, 16:46 [IST]
Other articles published on Aug 8, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+