Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs ENG: என்ன இந்த பையன் இப்படி தடுமாறாரு? தங்கமான வாய்ப்பை வீணடித்த ஜெய்ஸ்வால்

மும்பை : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் விராட் கோலி காயம் காரணமாக பங்கேற்காத நிலையில் ஜெய்ஸ்வால் அறிமுக வீரராக களம் இறங்கினார். இந்திய அணிக்காக ஓராண்டுக்கு மேல் விளையாடி வரும் ஜெய்ஸ்வால் டெஸ்ட் மற்றும் டி20 அணியில் இடம் பெற்றிருக்கிறார்.

ஆனால் ஒரு நாள் கிரிக்கெட்டில் ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்பே கிடைக்காமல் இருந்தது. இந்த சூழலில் ஆஸ்திரேலிய தொடரில் ஜெயஸ்வால் மட்டும் தான் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் சார்பாக நன்றாக விளையாடினார். இதனால் ஜெயிஸ்வாலுக்கு ஒரு நாள் அணியிலும் இடம் கொடுக்க வேண்டும் என பல்வேறு வீரர்கள் வலியுறுத்தி வந்தனர்.

ind vs eng yashasvi jaiswal rohit sharma virat kohli

இது குறித்து கருத்து தெரிவித்த அஸ்வின், ஒருநாள் அணியின் ஜெய்ஸ்வால் நிச்சயம் இடம் பெற வேண்டும். அதற்கான இடம் இருக்கிறது என்று கூறியிருந்தார். இந்த சூழலில் நாக்பூரில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 249 ரன்களை சேஸ் செய்ய வேண்டும் என்ற நிலையில் இருந்தது.

தொடக்க வீரராக களம் இறங்கி ஜெய்ஸ்வால் அதிரடி காட்டுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் இங்கிலாந்து வீரர்கள் அவருக்கு கட்டுக்கோப்பாக பந்து வீசினர். இதனை எதிர்கொள்ள முடியாமல் ஜெயிஸ்வால் தடுமாறினார். எனினும் 22 பந்துகளை எதிர் கொண்டு மூன்று பவுண்டர்களை அடித்து ஜெய்ஸ்வால் 15 ரன்கள் எடுத்தார். ஜெய்ஸ்வால் நன்றாக செட்டில் ஆகிவிட்டார் என எதிர்பார்த்தனர்.

ஆனால், கவன குறைவு காரணமாக தேவையில்லாத ஒரு ஷாட் ஆடி விக்கெட் கீப்பர் பில் சால்டிடம் கேட்ச் ஆனார். இதன் மூலம் ஜெயஸ்வால் தன்னுடைய முதல் சர்வதேச ஒரு நாள் போட்டியில் 15 ரன்களில் வெளியேறினார் ஜெய்ஸ்வால் தமக்கு கிடைத்த வாய்ப்பை வீணடித்து விட்டதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். ஜெய்ஸ்வால் மட்டும் இன்றைய ஆட்டத்தில் ஒரு சதம் அடித்திருந்தால், நிச்சயம் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் பிளேயிங் லெவனில் இடம்பெற்று இருப்பார் என்று தெரிவித்துள்ளனர்.

Story first published: Thursday, February 6, 2025, 20:12 [IST]
Other articles published on Feb 6, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+