IND vs ENG: யுவராஜ் சிங் கடவுள் போல வந்தார்.. அதிரடி மன்னன் அபிஷேக் சர்மாவின் தந்தை நெகிழ்ச்சி
மும்பை: சமீபத்தில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது டி20 போட்டியில் அபிஷேக் சர்மா 54 பந்துகளில் 135 ரன்கள் குவித்து புதிய சாதனை படைத்தார். டி20 போட்டிகளில் இந்திய வீரர் அடித்த இரண்டாவது அதிவேக சதம் இது. தனது மகன் இந்த சாதனையை செய்ததற்கு காரணமாக இருந்தவர்களை குறிப்பிட்டு நன்றி கூறி நெகிழ்ந்தார் அவரது தந்தை ராஜ்குமார் சர்மா. அவர் நமது மைகேல் (myKhel) ஆங்கில தளத்திற்கு அளித்த பிரத்யேக பேட்டி இங்கே -
முன்னாள் முதல் தர கிரிக்கெட் வீரரான ராஜ்குமார் சர்மா, அபிஷேக்கிற்கு கிரிக்கெட்டைப் பயில ஊக்கமளித்தார். 12 வயதிலேயே அபிஷேக் சர்மாவின் திறமை வெளிப்பட்டது. தனது மகன் சதம் அடித்தது பற்றியும், யுவராஜ் சிங் செய்த உதவிகளையும் பற்றியும் ராஜ்குமார் பேசுகையில்,
"நான் அந்த சதம் அடித்த போது மைதானத்தில் இல்லை, ஆனால் எனது மனைவி மற்றும் மகள் உலகத்தரம் வாய்ந்த அந்த ஆட்டத்தை நேரில் கண்டனர். நான் டிவியில் பார்த்துக் கொண்டிருந்தேன், மிகவும் பெருமையாக உணர்ந்தேன். சுற்றியுள்ள அனைவரும் எங்களைப் பாராட்டினர், எனது மகன் இந்தியாவுக்காக இவ்வளவு சிறப்பாக விளையாடியதைப் பார்த்தது மகிழ்ச்சியாக இருந்தது," என்று ராஜ்குமார் உணர்ச்சி பொங்கக் கூறினார்.
போட்டிக்குப் பிறகு அபிஷேக்குடன் பேசியதை நினைவு கூர்ந்த ராஜ்குமார், "நான் அவரைப் பாராட்டுவதற்காக அழைத்தேன். தொடர்ந்து சிறப்பாக விளையாடவும், எப்போதும் அணிக்கு முன்னுரிமை கொடுக்கவும் சொன்னேன். அதற்கு அவர், 'அப்பா, நான் எப்போதும் முதலில் அணிக்காக, இந்தியாவுக்காக விளையாடுவேன். சூழ்நிலைக்கு ஏற்ப எனது ஆட்டத்தை மாற்றி அமைப்பேன்' என்று பதிலளித்தார்," என்றார்.

அபிஷேக்கின் வளர்ச்சிக்கு யுவராஜ் சிங் முக்கிய பங்காற்றியதாக ராஜ்குமார் கூறினார். யுவராஜ் சிங் நீண்ட காலமாக இளம் அதிரடி வீரருக்கு வழிகாட்டி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் கணிசமான காலமாக பயிற்சியளித்து வருகிறார்.
"ஆமாம், யுவராஜ் சிங் எனது மகனுக்கு நிறைய நேரம் கொடுத்திருக்கிறார். குறிப்பாக கோவிட்-19 காலத்தில் அபிஷேக் அவருடன் 3 - 4 மாதங்கள் பயிற்சி பெற்றார். யுவராஜ் சர்வதேச அளவிலான பயிற்சி அளித்து, அவரது பேட்டிங் திறன்களை கணிசமாக மேம்படுத்தினார். யுவராஜ் இல்லாத நேரங்களில், அவரது தந்தை யோக்ராஜ் சிங் அபிஷேக்குக்கு வழிகாட்டுகிறார்."
"யுவராஜ் கடவுள் போல் வந்தார். அபிஷேக் எதைச் சாதித்தாலும், அவர் மற்றும் இன்னிங்ஸின் வெவ்வேறு கட்டங்களில் விளையாடுவது குறித்த அவரது அறிவுரையின் காரணமாகவே," என்று ராஜ்குமார் கூறினார்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் உடனான அபிஷேக்கின் அனுபவமும் அவரது வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றி உள்ளதாக கூறினார் ராஜ்குமார் சர்மா. "சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அபிஷேக்கை டாப் ஆர்டரில் பேட் செய்ய ஊக்குவித்தது. அப்போதைய பேட்டிங் பயிற்சியாளர் பிரையன் லாரா, அவர் இந்தியாவின் சிறந்த வீரர்களில் ஒருவராக இருக்க முடியும் என்பதை உணர்ந்தார். விவிஎஸ் லட்சுமண், ராகுல் டிராவிட் மற்றும் வாசிம் ஜாஃபர் ஆகியோரும் பெரிதும் உதவினர். அவர்களின் வழிகாட்டுதல் ஒரு ஆசீர்வாதம், அவர்களின் ஆதரவுக்கு நான் மிகவும் நன்றி உள்ளவனாக இருக்கிறேன்," என்று ராஜ்குமார் ஒப்புக் IND vs ENG: யுவராஜ் சிங்கின் பரம எதிரியை கிழித்து தொங்கவிட்ட அபிஷேக் சர்மா.. நெகிழ்ச்சி தருணம்கொண்டார்.
அபிஷேக் அனைத்து கிரிக்கெட் வடிவங்களிலும் சிறந்து விளங்க முடியுமா என்ற கேள்விக்கு, "ஆம், அவர் அனைத்து வடிவ ஆட்டக்காரராக இருக்க முடியும். யுவராஜ் சிங்கின் வழிகாட்டுதல் அவரது மனநிலையை வடிவமைப்பதால், இது டி20 போட்டிகளைப் பற்றியது மட்டுமல்ல. டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளிலும் அபிஷேக் தனது திறமை மற்றும் மனநிலையை வெளிப்படுத்த முடியும்," என்று ராஜ்குமார் நம்பிக்கையுடன் கூறினார்.


Click it and Unblock the Notifications