Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs NZ: முதல் டி20யில் தமிழக வீரருக்கு வாய்ப்பில்லை.. பேட்டிங்கை பலப்படுத்த இந்தியா எடுத்த முடிவு

கிறைஸ்ட்சர்ச்: நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி பேட்டிங்கை பலப்படுத்துவதற்காக வருண் சக்கரவர்த்தி மற்றும் குல்தீப் யாதவை பிளேயிங் லெவனில் சேர்க்காமல் விட்டுவிட்டது. நியூசிலாந்து ஆடுகளங்கள் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.

ஏற்கனவே அணியின் அச்சர் பட்டேல் உள்ளதால் இரண்டாவது சுழற் பந்துவீச்சாளருக்கு தேவை இருக்காது என முடிவெடுத்துள்ள இந்திய அணி நிர்வாகம், பார்ட் டைம் சுழற் பந்துவீச்சாளரான நமன் தீரை தேர்வு செய்து இருக்கிறது.

Ind vs NZ

இதன் மூலம் இந்திய அணியின் பேட்டிங் பலமாக மாறி இருக்கிறது. வருண் சக்கரவர்த்தி அல்லது குல்தீப் யாதவ் அணியில் இருந்திருந்தால் அது பந்துவீச்சுக்கு கூடுதல் பலத்தை சேர்த்திருக்கும். ஆனால் ஆடுகளம் தற்போது சுழற் பந்து வீச்சுக்கு ஏதுவாக இருக்காது என கணிக்கப்பட்டிருக்கிறது.

IND vs NZ: வெறும் 46 ரன்கள் மட்டுமே தேவை.. மாபெரும் சாதனையை படைக்க போகும் இசான் கிஷன்

IND vs NZ: வெறும் 46 ரன்கள் மட்டுமே தேவை.. மாபெரும் சாதனையை படைக்க போகும் இசான் கிஷன்

இதனால் தான் இந்திய அணி பேட்டிங் பலப்படுத்த நமன் தீர் மற்றும் நிதீஷ்குமார் ரெட்டிக்கு வாய்ப்பு இருக்கிறது. அது மட்டுமல்லாமல் வெஸ்ட் இண்டீஸ் எதிரான ஐந்தாவது டி20 போட்டியில் நமன் தீர் அபாரமாக விளையாடினார். மழையால் போட்டி 9 ஓவராக குறைக்கப்பட்ட நிலையில் களமிறங்கிய அவர் 6 பந்துகளில் 24 ரன்கள் குவித்தார். இதில் மூன்று சிக்சர் மற்றும் ஒரு பவுண்டரி அடங்கும்

அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 400 என்ற அளவில் இருந்தது. இந்த சூழலில் நமன் தீர் பேட்டிங் வரிசையில் ஆறாவது இடத்தில் தற்போது களமிறங்குகிறார். நிதிஷ்குமார் ரெட்டி ஏழாவது இடத்திலும், அக்சர் பட்டேல் எட்டாவது இடத்திலும் விளையாடுகிறார். இதன் மூலம் இந்திய அணியின் பேட்டிங் வரிசை பலமாக மாறியிருக்கிறது.

அதே சமயம் வேகப் பந்துவீச்சில் புவனேஸ்வர் குமார், மாயங் யாதவ், ஆர்ஸ்தீப் சிங் என மூன்று வீரர்கள் உள்ளனர். நிதிஷ்குமார் ரெட்டி மற்றும் நமன் தீர் இரண்டு ஓவர்களை வீசினால் கூட ஐந்தாவது பவுலரின் வேலையை முடித்துவிட முடியும். அக்சர் பட்டேல் தனி சுழற் பந்துவீச்சாளராகவும் பேட்டிங்கில் கை கொடுக்கும் வீரராகவும் களமிறங்குகிறார்.தேவைப்பட்டால் இந்திய அணி அபிஷேக் ஷர்மாவிடம் சில ஓவர்களை பெற்றுக் கொள்ள முடியும்.

IND vs NZ: ஒருநாள், டி20 அணியில் சேர்க்கப்படாதது மிகவும் சரியான முடிவு.. பத்ரிநாத் கருத்து

Also Read

IND vs NZ: ஒருநாள், டி20 அணியில் சேர்க்கப்படாதது மிகவும் சரியான முடிவு.. பத்ரிநாத் கருத்து

திலக் வர்மாவும் பந்து வீசக்கூடிய திறமை உடையவர் தான். ஒருவேளை நிதிஷ் குமார் ரெட்டி நான்கு ஓவர்கள் வீசக்கூடிய வலிமையைக் கொண்டால் இந்திய அணி மாயங் யாதவை நீக்கிவிட்டு வருண் சக்கரவர்த்தியை சேர்க்க வாய்ப்பு இருந்திருக்கும். இதனால் தான் ஹர்திக் பாண்டியாவின் தேவை இந்திய டி20 அணிக்கு மிகவும் முக்கியமாக மாறி இருக்கிறது. ஏனென்றால் ஹர்திக் பாண்டியாவை நம்பி 4 ஓவர்கள் வழங்க முடியும். ஆனால் அந்த திறன் கொண்ட ஆல் ரவுண்டர் இன்னும் இந்திய அணிக்கு கிடைக்கவில்லை.

Story first published: Thursday, October 22, 2026, 12:26 [IST]
Other articles published on Oct 22, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+