Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs NZ முதல் டெஸ்ட்: இந்தியாவின் பிளேயிங் XI என்ன? இரட்டை சதம் விளாசிய சர்பராஸ் கானுக்கு வாய்ப்பு

மும்பை : இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் நியூசிலாந்து அணி மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதன் முதல் டெஸ்ட் போட்டி பெங்களூருவில் வரும் 16ஆம் தேதி தொடங்குகிறது. இதற்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த சூழலில் ரோகித் சர்மா தலைமையிலான பிளேயிங் லெவன் எவ்வாறு இருக்கும் என்பதை தற்போது பார்க்கலாம். தொடக்க வீரராக ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால் ஆகியோர் விளையாட கூடும். ரோஹித் சர்மா கடந்த வங்கதேச டெஸ்ட் தொடரில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இதனால் ரோஹித் சர்மா நியூசிலாந்து தொடரில் ரன் குவிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.

ind vs nz rohit sharma virat kohli

ஜெய்ஸ்வால் நல்ல பார்மில் இருக்கிறார். மூன்றாவது வீரராக கில் விளையாடுகிறார். சென்னை டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த உத்வேகத்துடன் கில் இருக்கின்றார். எனினும் அவர் பெரிய அணிக்கு எதிராக விளையாட வேண்டும். நான்காவது இடத்தில் விராட் கோலி இருக்கிறார். விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் சதம் அடித்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டது. இதனால் அவரும் தன்னுடைய ரன் வேட்டையில் ஈடுபட வேண்டிய சூழலில் உள்ளார்.

ஐந்தாவது வீரராக கே எல் ராகுல் விளையாடக் கூடும். சப்ராஸ்கான் என்னதான் இரட்டை சதம் அடித்திருந்தாலும், அவரைவிட ராகுலுக்கு தான் சீனியாரிட்டி அடிப்படையில் வாய்ப்பு கிடைக்கும். நம்பர் ஆறாவது வீரராக ரிஷப் பன்ட் இருக்கிறார். இந்த ஏழாவது வீரராக ஆல்ரவுண்டர் ஜடேஜாவும் எட்டாவது வீரராக ஆல்ரவுண்டர் அஸ்வினும் இடம் பிடிக்க வாய்ப்பு இருக்கிறது. ஒன்பதாவது வீரராக அக்சர் பட்டேல் அல்லது குல்திப் யாதவ் இடம்பெற வாய்ப்புள்ளது.

ஒருவேளை இந்திய அணி மூன்று வேகப்பந்துவீச்சாளர்களை வைத்து களமிறங்கினால், ஒன்பதாவது இடத்தில் பும்ராவும் பத்தாவது இடத்தில் சிராஜும் 11 வது இடத்தில் ஆகாஷ் தீப்பும் இருப்பார்கள். மேலும் மூன்று சுழற் பந்துவீச்சாளர்களா இல்லை மூன்று வேகப்பந்துவீச்சாளர்களா என்பதை பெங்களூர் ஆடுகளம் தான் முடிவு செய்யும்.

Story first published: Monday, October 14, 2024, 15:38 [IST]
Other articles published on Oct 14, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+