Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs NZ: இந்தியாவை பழிவாங்கிய நியூசிலாந்து.. கம்பீர் செய்த தவறால் இந்திய அணி தோல்வி

ஆக்லாந்து: நியூசிலாந்துக்கு எதிரான 4-வது டி20 போட்டியில் இந்திய அணி 87 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. 260 ரன்கள் என்ற பிரம்மாண்ட இலக்கை நோக்கி களம் இறங்கிய இந்திய அணி, 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது. இந்த தோல்வியின் மத்தியிலும், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் தொடர்ந்து முன்னிலையில் உள்ளது.

இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 259 ரன்கள் குவித்தது. 5-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கிளென் பிலிப்ஸ் மற்றும் மைக்கேல் பிரேஸ்வெல் இணை அதிரடியாக ஆடி 100 ரன்களுக்கு மேல் சேர்த்தது. பிரேஸ்வெல் 25 பந்துகளில் 65 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து மைதானத்தின் நாலாபுறமும் சிக்சர்களை பறக்கவிட்ட கிளென் பிலிப்ஸ், 46 பந்துகளில் சதம் விளாசி மொத்தம் 107 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

Ind vs NZ

260 ரன்கள் என்ற இலக்கை துரத்திய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. முன்வரிசை வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால், 9 ஓவர்களுக்குள் 6 விக்கெட்டுகளை இழந்து இந்தியா தடுமாறியது. அபிஷேக், ஸ்ரேயாஸ் மற்றும் நிதிஷ் ஆகியோர் தலா 20 ரன்கள் மேல் எடுத்தாலும் பெரிய இன்னிங்ஸாக மாற்றத் தவறினர். நடுவரிசையில் போராடிய திலக் வர்மா 35 ரன்களும், பிரின்ஸ் யாதவ் 18 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

IND vs NZ: புவனேஸ்வர் குமாரை நீக்கியது தவறு.. மீண்டும் கம்பேக் தருவார்- தினேஷ் கார்த்திக் நம்பிக்கை

IND vs NZ: புவனேஸ்வர் குமாரை நீக்கியது தவறு.. மீண்டும் கம்பேக் தருவார்- தினேஷ் கார்த்திக் நம்பிக்கை

நிதிஷ் குமார் 21 ரன்களிலும், நமன் தீர் 28 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இசான் கிஷன் சம்பந்தே இல்லாமல் தொடக்க வீரராக களமிறங்கியதும் தோல்விக்கு காரணமாக அமைந்தது. நியூசிலாந்து தரப்பில் மிட்செல் சான்ட்னர் மிகவும் கட்டுக்கோப்பாக பந்துவீசி 24 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

IND vs NZ: ஸ்ரேயாஸ் ஐயர் மாபெரும் சாதனை.. கேப்டனாக ரோகித் சர்மா ரெக்கார்ட் முறியடிப்பு

Also Read

IND vs NZ: ஸ்ரேயாஸ் ஐயர் மாபெரும் சாதனை.. கேப்டனாக ரோகித் சர்மா ரெக்கார்ட் முறியடிப்பு

மேத்யூ பிஷர் 40 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளையும், ஆடம் மில்னே ஒரு விக்கெட்டையும் வீழ்த்தி இந்தியாவின் ரன் வேகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தனர். இந்த 87 ரன்கள் வித்தியாசத்திலான வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி தொடரில் ஒயிட்வாஷ் செய்யப்படுவதில் இருந்து தப்பியதுடன், தனது முதல் வெற்றியையும் பதிவு செய்துள்ளது.

Story first published: Friday, October 30, 2026, 16:42 [IST]
Other articles published on Oct 30, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+