IND vs NZ: ஸ்ரேயாஸ் ஐயர் மாபெரும் சாதனை.. கேப்டனாக ரோகித் சர்மா ரெக்கார்ட் முறியடிப்பு
மும்பை: ஒரு ஆண்டில் சர்வதேச டி20 போட்டிகளில் இந்திய அணியின் கேப்டனாக அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை ஸ்ரேயாஸ் ஐயர் படைத்துள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் அதிரடியாக விளையாடியதன் மூலம், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மாவின் சாதனையை அவர் முறியடித்துள்ளார்.
கடந்த 2022-ஆம் ஆண்டில் அப்போதைய கேப்டன் ரோஹித் சர்மா 29 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி 656 ரன்கள் எடுத்திருந்ததே இதுவரை இந்திய கேப்டன் ஒருவரால் எட்டப்பட்ட அதிகபட்ச ரன்னாக இருந்தது. தற்போதைய 2026ஆம் ஆண்டில் ஸ்ரேயாஸ் ஐயர் வெறும் 25 போட்டிகளிலேயே 657 ரன்களை கடந்து, ரோஹித்தின் 4 ஆண்டு கால சாதனையை தன்வசப்படுத்தியுள்ளார்.

கேப்டனாக பொறுப்பேற்ற சிறிது காலத்திலேயே அவர் இத்தகைய மைல்கல்லை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. நியூசிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் 260 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி இந்திய அணி களம் இறங்கியது. இந்த போட்டியில் களமிறங்குவதற்கு முன்பாக, ரோஹித்தின் சாதனையை முறியடிப்பதற்கு ஸ்ரேயாஸ் ஐயருக்கு வெறும் 13 ரன்கள் மட்டுமே தேவையாக இருந்தது.
மைதானத்தில் அதிரடி காட்டிய ஸ்ரேயாஸ், வெறும் 8 பந்துகளில் 13 ரன்களைக் கடந்து இந்தச் வரலாற்றுச் சாதனையைப் பூர்த்தி செய்தார். எனினும் 11 பந்துகளில் 22 ரன்கள் எடுத்த நிலையில் அவர் ஆட்டமிழந்தார்.
கடந்த 2026 ஜூன் 6 அன்று சூர்யகுமார் யாதவுக்குப் பதிலாக இந்திய டி20 அணியின் புதிய கேப்டனாக ஐயர் நியமிக்கப்பட்டார். ரோகித் சர்மா 2022ஆம் ஆண்டு 29 போட்டியில் கேப்டனாக 656 ரன்கள் குவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications

