Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs NZ: அபிஷேக் சர்மாவை கேப்டனாக நியமனம் செய்யுங்கள்.. தோல்விக்கு பிறகு பிரபல வீரர் கருத்து

மும்பை: இந்திய அணியின் முன்னாள் தலைசிறந்த ஆல்-ரவுண்டர் யுவராஜ் சிங், இளம் ஆட்டக்காரர் அபிஷேக் சர்மாவுக்கு எதிர்காலத்தில் இந்திய கிரிக்கெட் அணியை வழிநடத்தும் அனைத்துத் தகுதிகளும் இருப்பதாகக் தெரிவித்துள்ளார். உள்நாட்டு போட்டிகளில் பஞ்சாப் மாநில அணியின் கேப்டனாகச் செயல்பட்டுள்ள அபிஷேக் சர்மா, ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் துணை கேப்டனாகவும் பொறுப்பேற்றுள்ளார்.

அபிஷேக் சர்மாவிற்கு நீண்டகாலமாக வழிகாட்டியாக இருந்து வரும் யுவராஜ் சிங், அவரிடம் ஒரு தலைவருக்கான சிறந்த குணங்கள் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். மாநில அளவிலான போட்டிகளில் வைபவ் சூரியவன்ஷி போன்ற இளம் வீரர்களுக்கு அபிஷேக் அளிக்கும் ஊக்கமும் வழிகாட்டலும் ஒரு மூத்த தலைவருக்கான நல்ல அறிகுறியாகும் என்று அவர் பாராட்டியுள்ளார்.

Abhishek sharma

இதுகுறித்து பேசிய யுவராஜ், "எதிர்காலத்தில் இந்திய அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்க வேண்டுமென்றால், அதற்கு முன்பாக ஐபிஎல் தொடரில் ஏதேனும் ஒரு அணியை வழிநடத்துவது மிகவும் முக்கியம். அதுவே சர்வதேச அளவில் இந்திய அணியை வழிநடத்துவதற்கான தன்னம்பிக்கையை வழங்கும்.

IND vs NZ: அப்படியே தோனி ஐயாவை பார்த்த மாதிரி இருக்கு.. பேட்டிங்கில் சாதித்த இசான் கிஷன்

IND vs NZ: அப்படியே தோனி ஐயாவை பார்த்த மாதிரி இருக்கு.. பேட்டிங்கில் சாதித்த இசான் கிஷன்

அபிஷேக்கின் விதியில் இருந்தால், அவருக்கு அந்த வாய்ப்பு நிச்சயம் கிடைக்கும். அவர் கேப்டனாக மாறினாலும் இல்லாவிட்டாலும், வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் ஒரு சிறந்த வீரராகத் தனது பயணத்தை நிறைவு செய்வார்" என்று கூறினார்.

வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் அபிஷேக் சர்மா தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதைச் சுட்டிக்காட்டிய யுவராஜ் சிங், அவரை இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியில் சேர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். அணியில் இடம் பெறக் கடும் போட்டி நிலவினாலும், ஒரு வீரருக்குப் போதிய வாய்ப்பளித்தால் மட்டுமே அவர் தனது திறமையை வெளிப்படுத்த முடியும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

IND vs NZ: ஃபில்டிங்கில் தவறு செய்தோம்.. பவுலிங்கில் கவனம் செலுத்தனும்- கேப்டன் ஸ்ரேயாஸ் கருத்து

Also Read

IND vs NZ: ஃபில்டிங்கில் தவறு செய்தோம்.. பவுலிங்கில் கவனம் செலுத்தனும்- கேப்டன் ஸ்ரேயாஸ் கருத்து

அபிஷேக் சர்மா பந்துவீச்சு மற்றும் ஃபீல்டிங்கிலும் தனது பங்களிப்பை அதிகரிக்கும் பட்சத்தில், எதிர்வரும் ஒருநாள் உலகக்கோப்பைத் தொடருக்கு முன்னதாகவே அவருக்கு 50 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் வாய்ப்பளிக்க வேண்டும் என்றும் யுவராஜ் சிங் கேட்டுக்கொண்டுள்ளார்.

Story first published: Sunday, November 1, 2026, 19:31 [IST]
Other articles published on Nov 1, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+