Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs NZ: அப்படியே தோனி ஐயாவை பார்த்த மாதிரி இருக்கு.. பேட்டிங்கில் சாதித்த இசான் கிஷன்

மும்பை: நியூசிலாந்துக்கு எதிரான ஐந்தாவது டி20 போட்டியில் இந்திய அணி வீரர் இஷான் கிஷன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஹேமில்டனில் உள்ள செடான் பார்க் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் புகழ்பெற்ற ஹெலிகாப்டர் ஷாட் அடித்து அவர் அசத்தினார்.

போட்டியின் 9-வது ஓவரை மிட்செல் சான்ட்னர் வீசினார். அந்த ஓவரின் மூன்றாவது பந்தில், இஷான் கிஷன் கிரீஸின் பின்னால் சென்று மிடில் ஸ்டம்ப் திசையில் வந்த பந்தை ஹெலிகாப்டர் ஷாட் மூலம் மிட்-விக்கெட் திசையில் பவுண்டரிக்கு விரட்டினார். இது சிக்ஸராக மாறாவிட்டாலும், தோனியின் சிக்னேச்சர் ஷாட்டை நினைவுப் படுத்தியது.

Ishan Kishan

இப்போட்டியில் அபாரமாக ஆடிய இஷான் கிஷன், 28 பந்துகளில் தனது அரைசதத்தைப் பூர்த்தி செய்தார். சதம அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. இறுதியில் 32 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 61 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இவரது ஸ்டிரைக் ரேட் 190.62 ஆகும். சர்வதேச டி20 போட்டிகளில் இஷான் கிஷனுக்கு இது 14-வது அரைசதமாகும்.

IND vs NZ: மீண்டும் மீண்டுமா? சஞ்சு சாம்சன் 4 ரன்களில் அவுட்.. அணியை விட்டு நீக்கப்படுவாரா?

IND vs NZ: மீண்டும் மீண்டுமா? சஞ்சு சாம்சன் 4 ரன்களில் அவுட்.. அணியை விட்டு நீக்கப்படுவாரா?

இந்த அரைசதத்தின் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இஷான் கிஷன் 2000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டினார். இதன்மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் 2000 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்களைக் கடந்த 7-வது இந்திய பேட்டர் என்ற பெருமையை அவர் பெற்றார். இதுவரை 69 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 31.01 சராசரியுடனும் 149.22 ஸ்டிரைக் ரேட்டுடனும் 2016 ரன்கள் குவித்துள்ளார். இதில் ஒரு சதமும் 14 அரைசதங்களும் அடங்கும்.

எதிர்கொண்ட பந்துகளின் அடிப்படையில் டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக 2000 ரன்களை எட்டிய 3-வது இந்திய பேட்டர் என்ற சாதனையையும் இஷான் கிஷன் படைத்துள்ளார். அவர் இந்த மைல்கல்லை எட்ட 1,345 பந்துகளை எடுத்துக்கொண்டார். இப்பட்டியலில் 1024 பந்துகளில் 2000 ரன்களைக் கடந்த அபிஷேக் சர்மா முதலிடத்திலும், 1164 பந்துகளில் எட்டிய சூர்யகுமார் யாதவ் இரண்டாம் இடத்திலும் உள்ளனர்.

IND vs NZ: சொதப்பிய தொடக்க ஜோடி.. இந்திய அணியை காப்பாற்றிய ஸ்ரேயாஸ், இசான் கிஷன்

Also Read

IND vs NZ: சொதப்பிய தொடக்க ஜோடி.. இந்திய அணியை காப்பாற்றிய ஸ்ரேயாஸ், இசான் கிஷன்

2026-ஆம் ஆண்டில் இஷான் கிஷனுக்கு சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சிறப்பான ஆண்டாக அமைந்துள்ளது. இந்த ஆண்டில் இதுவரை 37 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 35.88 சராசரியுடனும் 171.58 ஸ்டிரைக் ரேட்டுடனும் 1220 ரன்கள் குவித்துள்ளார். இதில் ஒரு சதமும் 8 அரைசதங்களும் அடங்கும்.

Story first published: Sunday, November 1, 2026, 14:44 [IST]
Other articles published on Nov 1, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+