Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs NZ: மீண்டும் மீண்டுமா? சஞ்சு சாம்சன் 4 ரன்களில் அவுட்.. அணியை விட்டு நீக்கப்படுவாரா?

ஆக்லாந்து: நியூசிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது டி20 போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர தொடக்க வீரர் சஞ்சு சாம்சன் 4 ரன்களில் ஆட்டம் இழந்து இருப்பது ரசிகர்களை கடுப்படைய செய்திருக்கிறது. t20 உலக கோப்பையை இந்திய அணி வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர் சஞ்சு சாம்சன்.

தொடக்க வீரராக அபாரமாக விளையாடி இந்திய அணிக்காக அந்த தொடரில் அதிக ரன்கள் சேர்த்தார். இதன் மூலம் இந்திய அணி t20 உலக கோப்பையை தொடர்ந்து இரண்டாவது முறையாக வென்று சாதனை படைத்தது. ஆனால் அதன் பிறகு சஞ்சு சாம்சன் பார்ம் ஒரே மாதிரி இல்லாமல் இருப்பது அவருக்கு பிரச்சனையை தந்து இருக்கிறது.

Sanju samson

அது மட்டும் இல்லாமல் இசான் கிஷன், வைபவ் சூரியவன்சி ஆகியோர் அணியில் இருப்பது சஞ்சு சாம்சன் கடும் நெருக்கடியை ஏற்படுத்துகிறது. மூன்றாவது டி20 போட்டியில் சஞ்சு சாம்சன் அணியில் இருக்கும் போதே வைபவ் சூர்யவன்சியை தொடக்க வீரராக இந்திய அணி நிர்வாகம் களம் இறக்கியது.

WTC 2027 புள்ளி பட்டியல்: தென்னாப்பிரிக்கா எதிரான டெஸ்ட் தொடர் தோல்வி.. ஆஸ்திரேலிய அணி சரிவு

WTC 2027 புள்ளி பட்டியல்: தென்னாப்பிரிக்கா எதிரான டெஸ்ட் தொடர் தோல்வி.. ஆஸ்திரேலிய அணி சரிவு

அந்த போட்டியில் சூரியவன்சி மற்றும் அபிஷேக் ஜோடி அபாரமாக விளையாடி பவர்பிளேவில் 118 ரன்களை விக்கெட் இழப்பின்றி சேர்த்து உலக சாதனை படைத்தது. இதனால் சஞ்சு சாம்சனுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டு இருக்கிறது. நான்காவது டி20 போட்டியில் விளையாடிய சாம்சன் வெறும் 4 ரன்களில் ஆட்டம் இழந்தார். இந்த நிலையில் கடைசி டி20 போட்டி ஆக்லாந்தில் இன்று தொடங்கியது.

இதில் தொடக்க வீரராக சாம்சன் களமிறங்கினார். மற்றொரு தொடக்க வீரரான அபிஷேக் ஷர்மா ஒரு ரன்னில் ஆட்டமிழக்க சாம்சன் நிலைத்து நின்று அணியை காப்பாற்றுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் பத்து பந்துகளில் வெறும் நான்கு ரன்கள் மட்டுமே எடுத்து மீண்டும் சொதப்பினார்.

IND vs NZ: காலை வாரிய அபிஷேக் சர்மா.. வந்த வேகத்தில் அவுட்.. இந்தியா தடுமாற்றம்

Also Read

IND vs NZ: காலை வாரிய அபிஷேக் சர்மா.. வந்த வேகத்தில் அவுட்.. இந்தியா தடுமாற்றம்

இந்த தொடரில் சஞ்சு சாம்சன் முதல் டி20 போட்டியில் அதிகபட்சமாக 67 ரன்கள் எடுக்க அடுத்த நான்கு டி20 போட்டிகளிலும் 14,18, 4 ,4 ஆகிய ரன்கள் மட்டுமே எடுத்து இருக்கிறார். இதனால் இடம் டி20 அணியில் இருந்து பறிபோகும் சூழல் உருவாகி இருக்கிறது. இந்திய அணி அடுத்ததாக டி20 தொடரை இலங்கைக்கு எதிராக வரும் டிசம்பர் மாதம் 22 ஆம் தேதி விளையாடுகிறது.

Story first published: Sunday, November 1, 2026, 13:25 [IST]
Other articles published on Nov 1, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+