Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs NZ: காலை வாரிய அபிஷேக் சர்மா.. வந்த வேகத்தில் அவுட்.. இந்தியா தடுமாற்றம்

ஹாமில்டன்: இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இடையிலான 5வது டி20 போட்டி ஹேமில்டன் செடன் பார்க் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. 5 போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடரில் முதல் மூன்று போட்டிகளை வென்று இந்திய அணி ஏற்கனவே தொடரை கைப்பற்றியுள்ளது.

இருப்பினும், ஆக்லாந்தில் நடைபெற்ற நான்காவது போட்டியில் நியூசிலாந்து அணி 87 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், இந்த கடைசிப் போட்டியில் வெற்றி பெற்று தொடரை வெற்றியுடன் முடிக்க இரு அணிகளும் தீவிரம் காட்டி வருகின்றன.

Abhishek sharma

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் மிட்செல் சாண்ட்னர் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பத்திலேயே பின்னடைவு ஏற்பட்டது. தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா 1 ரன்னில் ஜேக்கப் டஃபி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 1.1 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 1 விக்கெட் இழப்பிற்கு 2 ரன்கள் எடுத்துள்ளது.

WTC 2027 புள்ளி பட்டியல்: தென்னாப்பிரிக்கா எதிரான டெஸ்ட் தொடர் தோல்வி.. ஆஸ்திரேலிய அணி சரிவு

WTC 2027 புள்ளி பட்டியல்: தென்னாப்பிரிக்கா எதிரான டெஸ்ட் தொடர் தோல்வி.. ஆஸ்திரேலிய அணி சரிவு

3வது டி20 போட்டியில் அபிஷேக் சர்மா 35 பந்துகளில் அதிவேக சதம் விளாசி சாதனை படைத்தார். எனினும் அடுத்த டி20 போட்டியில் 27 ரன்கள் மட்டுமே எடுக்க, இந்திய அணி தோல்வியை தழுவியது. தற்போது கடைசி போட்டியிலும் அவர் சொதப்பியதால் மற்ற வீரர்கள் மீது நெருக்கடியை ஏற்படுத்தியது. இதே போன்று அபிஷேக் சர்மா தொடர்ந்து ஒரே மாதிரி ரன் அடிப்பதில்லை என்ற விமர்சனமும் அவர் முன் வைக்கப்படுகிறது.

SA vs AUS: தோற்றாலும், நாங்கள் சிறந்த அணி தான்.. ஆஸி. அணியில் மாற்றம் வர போகிறது- கேப்டன் கம்மின்ஸ்

Also Read

SA vs AUS: தோற்றாலும், நாங்கள் சிறந்த அணி தான்.. ஆஸி. அணியில் மாற்றம் வர போகிறது- கேப்டன் கம்மின்ஸ்

போட்டிக்கு முன்பாக பேசிய இந்திய தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர், தொடரை வென்றபோதிலும் எந்தவொரு போட்டியையும் இலகுவாக எடுத்துக்கொள்ள முடியாது என்றார். சமூக ஊடகங்களின் அழுத்தங்களுக்காக முடிவுகளை எடுக்காமல், வீரர்களுக்கு போதிய வாய்ப்புகளையும் பாதுகாப்பையும் வழங்கி சரியான முடிவுகளை எடுப்பதே தனது அணுகுமுறை என்று அவர் தெளிவுபடுத்தினார்.

Story first published: Sunday, November 1, 2026, 12:57 [IST]
Other articles published on Nov 1, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+