Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அபிஷேக் சர்மாவுக்கு கட்டம் கட்டிய பவுலர்கள்.. சுக்கு நூறாக உடைத்து அபாரம்.. ரவி சாஸ்திரி பாராட்டு

வெலிங்டன்: நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் அபார சதம் அடித்த இந்திய தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மாவுக்கு முன்னாள் இந்திய வீரர் ரவி சாஸ்திரி புகழாரம் சூட்டியுள்ளார். இடதுகை பேட்டரான அபிஷேக், லெக்-சைடு ஆட்டத்தில் கூடுதல் கவனம் செலுத்தி தனது பேட்டிங்கை மேம்படுத்தியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வெலிங்டனில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 3 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் குவித்தது. கடினமான இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு அபிஷேக் சர்மா 38 பந்துகளில் 113 ரன்கள் விளாசினார். இதன் மூலம் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும், 40 பந்துகள் மீதமிருந்த நிலையிலும் அபார வெற்றி பெற்றது.

Abhishek Sharma

இது குறித்து பேசிய ரவி சாஸ்திரி, "இது ஒரு சிறப்பான இன்னிங்ஸ். ஆஃப்-சைடில் ரன் அடிக்க பவுலர்கள் இடம் தராதபோது, அபிஷேக் தனது முன் காலை நகர்த்தி லெக்-சைடில் பெரிய ஷாட்களை அடிக்கிறார். பந்துவீச்சாளர்கள் சிறிதளவு விலகி வீசினாலும் அதை ஃபிளிக் செய்து பவுண்டரிக்கு அனுப்பிவிடுகிறார்" என்று கூறினார்.

IND vs NZ: அபிஷேக் சர்மாவை அணியை விட்டு நீக்க சொன்னவங்க இப்போ எங்க போனீங்க? இர்பான் பதான் கேள்வி

IND vs NZ: அபிஷேக் சர்மாவை அணியை விட்டு நீக்க சொன்னவங்க இப்போ எங்க போனீங்க? இர்பான் பதான் கேள்வி

"அவரிடம் சிறந்த மணிக்கட்டு சுழற்சி உள்ளது. மைதானத்தின் சைடு பவுண்டரி சிறியதாக இருக்கும்போது, பந்து சரியாக பேட்டில் படாவிட்டாலும் கூட சிக்ஸருக்குச் சென்றுவிடுகிறது. எதிரணிகள் அவருக்கு எதிராகத் திட்டமிடத் தொடங்கியதால், அவரும் தனது ஆட்டத்தை மேம்படுத்தியுள்ளார். அவர் மிகவும் ஆபத்தான பேட்டர்" என்று தெரிவித்தார்.

நியூசிலாந்து பந்துவீச்சாளர்கள் அபிஷேக் சர்மா மற்றும் வைபவ் சூர்யவன்ஷி ஜோடிக்கு எதிராகக் கூடுதல் யார்க்கர்களை வீசியிருக்க வேண்டும் என்றும் ரவி சாஸ்திரி சுட்டிக்காட்டினார். "கடைசி இரண்டு போட்டிகளில் நியூசிலாந்து திருத்த வேண்டிய ஒரு விஷயம் இருந்தால், அது இந்த தொடக்க ஜோடிக்கு எதிராக அதிக யார்க்கர்களை வீசுவதுதான். அவர்கள் போதுமான யார்க்கர்களை வீசவில்லை. ஆனால் இந்திய பந்துவீச்சாளர்கள் மைதானத்தின் அளவைக் கணித்து பந்துவீசி ரன் வேகத்தைக் கட்டுப்படுத்தினர்" என்றார்.

IND vs NZ: உலககோப்பையில் 19வது ஓவர் இப்படி நடக்காது.. கேப்டன் ஸ்ரேயாஸ்க்கு இர்பான் பதான் அறிவுரை

Also Read

IND vs NZ: உலககோப்பையில் 19வது ஓவர் இப்படி நடக்காது.. கேப்டன் ஸ்ரேயாஸ்க்கு இர்பான் பதான் அறிவுரை

தான் எதிர்கொண்ட முதல் பந்திலேயே அபிஷேக் சிக்ஸர் அடித்தது குறித்துப் பேசிய ரவி சாஸ்திரி, "இன்னிங்ஸின் முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்துத் தனது அதிரடியை அவர் தொடங்கினார். அவரது ஆஃப்-சைட் ஆட்டம் எப்போதும் பார்க்க அற்புதமாக இருக்கும். தவறான பந்துகளை அவர் விட்டுவைக்கவில்லை. மைதானத்தின் சூழலுக்கேற்ப அவர் ஆடிய விதம் ஒரு மகத்தான இன்னிங்ஸ்" என்று பாராட்டினார்.

Story first published: Wednesday, October 28, 2026, 9:30 [IST]
Other articles published on Oct 28, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+