Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs NZ-கெட்ட வார்த்தையில் திட்டினாரா அனுஷ்கா சர்மா? கோலி அவுட்டுக்கு மனைவி தந்த ரியாக்சன்

மும்பை: சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணி விளையாடும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெறுகிறது. ஒரு காலத்தில் இந்திய அணி எந்த வெளிநாட்டுக்கு சென்றாலும் தங்களுடைய மனைவி மற்றும் குடும்பத்தினரை அழைத்துச் செல்ல பிசிசிஐ ஏற்பாடு செய்யும்.

ஆனால் பார்டர் கவாஸ்கர் தொடரில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணி தோல்வியை தழுவியதற்கு குடும்பத்தினர் இருந்ததுதான் காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்தது.இதன் காரணமாக பிசிசிஐ நடவடிக்கையை எடுத்தது.

Champions Trophy 2025 Ind vs NZ virat kohli Rohit sharma

இனிமேல் ஒரு மாதம் நடைபெறும் வெளிநாட்டு தொடரில் வீரர்களின் குடும்பத்தினர் ஒரு வாரம் மட்டும்தான் தங்க அனுமதி அளிக்கப்படும் என பிசிசிஐ கூறியிருந்தது. இதனால் சாம்பியன்ஸ் டிராபி தொடர் துபாயில் நடைபெறுவதால் வீரர்களின் குடும்பத்தினர் பலரும் வரவில்லை. இந்த சூழலில் இந்திய அணி தங்களுடைய முதல் இரண்டு லீக் ஆட்டத்தையும் உடனே விளையாடி முடித்து விட்டது.

இதனால் ஆறு நாட்கள் இந்திய வீரர்களுக்கு ஓய்வு இருந்தது. அதன் பிறகு இந்திய அணி தங்களுடைய கடைசி லீக் ஆட்டத்தில் இன்று நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. இந்த சூழலில் தான் விராட் கோலியின் மனைவி அனுஷ்கா ஷர்மா நடப்பு தொடரில் முதல்முறையாக துபாய்க்கு கணவனின் பேட்டிங்கை பார்க்க வந்தார்.

விராட் கோலி நல்ல பார்மில் இருந்த நிலையில் மனைவிக்கு முன் மீண்டும் அவர் பட்டையை கிளப்புவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் விராட் கோலி 11 ரன்கள் எடுத்திருந்தபோது அவர் அடித்த பந்தை பிலிப்ஸ் அபாரமாக பாய்ந்து பிடித்தார். இதனை மைதானத்தை நின்று பார்த்த விராட் கோலியின் மனைவி அனுஷ்கா சர்மா தன் தலையில் அடித்துக்கொண்டு நான் வரும்போது இப்படி நடக்க வேண்டுமா என்பது போல் ரியாக்சன் கொடுத்தார்.

அனுஷ்கா சர்மாவின் இந்த ரியாக்ஷன் சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது. மேலும் அனுஷ்கா சர்மா நியூசிலாந்து வீரரை கெட்ட வார்த்தையில் திட்டியதாக ரசிகர்கள் சிலரும் அவருடைய உதடு நகர்வதை வைத்து கூறினர். ஆனால் அவர் தனது ஏமாற்றத்தை தான் வெளிப்படுத்தினார்.

Story first published: Sunday, March 2, 2025, 17:05 [IST]
Other articles published on Mar 2, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+